Share on Social Media


கடலுார்-புரட்டாசி மாதத்தையொட்டி, கடலுாரில் மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துவாங்க ஆள் இல்லாமல், மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.க்ஷ
பெருமாளுக்கு உகந்தது புரட்டாசி மாதம். இம்மாதம் துவங்கியதுமே பெரும்பாலான இந்துக்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவர். இதனால் புரட்டாசி மாதம் முழுமையும் வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். புரட்டாசி மாதத்தில் வெயிலும் காற்றும் குறைந்து மழை துவங்கும் என்பதால், பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழை நீரை ஈர்த்து, வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.

இதனால், உடல் சூடாகி உபாதைகள் ஏற்படும் என்பதால் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என, முன்னோர்கள் கூறினர்.அதையொட்டி புரட்டாசி மாதத்தில் இறைச்சி விற்பனை ‘டல்’ அடிப்பதுடன், விலையும் கடுமையாக குறைந்துவிடும். இந்த ஆண்டு கடலுாரில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலுார் முதுநகர், பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் விசைப்படகு மீன்பிடி துறைமுகங்கள், முடசல் ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர்., திட்டு, பேட்டோடை பகுதிகளில் சிறிய மீன்பிடி தளங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்களை ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள் சிக்கின. இதையடுத்து கரையில் மீன்களை ஏலம் விட்டனர். புரட்டாசி மாதம் என்பதால் மீன்களை ஏலம் எடுக்க நிறைய வியாபாரிகள் வரவில்லை. புரட்டாசி மாத விரதம் இருப்போரும் மீன்கள் வாங்க துறைமுகத்திற்கு வரவில்லை. இதனால் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்தது.ரூ.600க்கு விற்ற கொடுவா மீன் ரூ.300க்கும், கிலோ ரூ. 300க்கு விற்ற சங்கரா ரூ. 150க்கும், நண்டு ரூ.200க்கும், கனவா மீன் ரூ. 400ல் இருந்து ரூ. 150 ஆகவும், ரூ. 300க்கு விற்ற கானாங்கத்தை 100 ரூபாயை விட குறைவாகவும் விற்பனையானது. மேலும், 20 கிலோ எடை கொண்ட கவளை மீன் பாக்ஸ் ரூ. 900 இருந்து ரூ. 250 ஆக விலை வீழ்ச்சியடைந்தது. பாறை மீன் ரூ. 300ல் இருந்து ரூ. 150 ஆக குறைந்தது.

அதேபோன்று கிலி மீன், இறால், காரை உள்ளிட்ட மீன்களின் விலையும் பாதியாக வீழ்ச்சியடைந்தது. இதனால், மீனவர்கள் கவலை அடைந்தனர்.இதையடுத்து மீன்களை ஐஸ் பெட்டிகளில் பதப்படுத்தி கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பினர். இந்த ஒரு மாத காலம் மீன்கள் விலை சற்று குறைவாக தான் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது அதிகளவில் கிடைக்கும் நிலையில், புரட்டாசி மாதம் என்பதால் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்து, துறைமுகங்களில் உள்ளூர் வியாபாரிகள் கூட அதிகம் மீன்வாங்க வராமல் வெறிச்சோடியது. கடலுார் முதுநகர், திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடியதால் வியாபாரிகள் பாதித்துள்ளனர்.

அதே சமயத்தில் கோழி இறைச்சி விலை குறையாமல் கிலோ ரூ. 220க்கும், ஆட்டிறைச்சி ரூ. 750 முதல் ரூ. 800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஆண்டு விர்…கொரோனா பாதித்தவர்கள் மீண்டும் உடல் பழைய நிலைக்கு வருவதற்கு, புரோட்டின் உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற தகவல் பரவ, கடந்த ஆண்டு புரட்டாசி மாதத்தையே மறந்து பலரும் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் மீன் மற்றும் இறைச்சி விலை குறையாமல் நாளுக்கு நாள் உயர்ந்தது. கோழி இறைச்சி ரூ. 220 வரையும், ஆட்டிறைச்சி விலை ரூ. 850 வரையும் விற்றது. முட்டை விலையும் கடந்த ஆண்டு ரூ. 5 க்கு விற்றது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *