Share on Social Media

பலருக்கு தெரியும் அந்தப் பந்தை வீசிய வீரர் ட்ரென்ட் போல்ட் என்று. ட்ரென்ட் அலெக்சாண்டர் போல்ட்… டெஸ்ட் போட்டியோ ஒரு நாள் போட்டியோ… நியூசிலாந்து அணி பந்து வீசப்போகிறது என்றாலே எந்த கேப்டன் ஆக இருந்தாலும் பந்தை இவர் கைகளில் தான் கொடுப்பார்கள். காரணம் போல்ட்டிடம் இருப்பது வேகம் மட்டுமல்ல விவேகமும் கூட. எந்தப் பந்து எந்த திசையில் இருந்து வந்து எந்த திசைக்குச் செல்லும் என்பதை கணிப்பதே பேட்ஸ்மேன்களின் முதல் வேலையாக இருக்கும். அதன் பின்புதான் எந்த ஷாட் அடிப்பது என்ற கேள்வியே பிறக்கும். போல்ட் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சிறிதும் நேரம் கொடுக்க மாட்டார் யோசிக்க. வில்லில் இருந்து பிரியும் அம்பு போல அவரது கரங்களில் இருந்து பந்து பிரியும். அது அவுட் ஸ்விங்கரா இல்லை இன் ஸ்விங்கரா என்று ஒரு பேட்ஸ்மேன் நொடிப்பொழுதில் முடிவு எடுக்க வேண்டும்.

ட்ரென்ட் போல்ட்

ட்ரென்ட் போல்ட்
Andrew Cornaga

ஒரு நொடி எக்ஸ்ட்ராவாக எடுத்தால் கூட அடுத்த நொடி பெவிலியன் நோக்கி நடக்க வேண்டியது தான். மனிதன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்று ஒரு கூற்று உண்டு. தனது பந்தில் தவறான ஷாட்டை செலக்ட் செய்பவர்களை போல்ட் அப்போதே கொன்று விடுவார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2020-ம் ஆண்டு நடந்த IPL இறுதிப்போட்டி. தனது முதல் பந்திலேயே ஸ்டாய்னிசை அவுட் ஆக்கி ஆட்டத்தை அப்படியே மும்பை இந்தியன்ஸ் அணியின் கைகளில் கொடுத்து விட்டார் போல்ட்.

இத்தனை ஆண்டு கால நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த நியூசிலாந்து அணி என்று பதினொரு வீரர்களை எடுத்தால் அதில் டெஸ்ட், ஒருநாள் என்று இரண்டு அணிகளிலும் இடம் பிடித்து விடுவார். வேகமும் விவேகமும் இணைந்தால் எந்த பேட்ஸ்மேனும் தோற்றுப் போவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்திய அணிக்கு எதிராக 2020-ல் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு, விராட் போன்ற வீரர்களை அவுட் ஆக்குவதற்குதான் நான் கிரிக்கெட் ஆடுகிறேன் என்று சொன்னார். சொன்னது போலவே விராட் கோலியை அந்தத் தொடரில் அவுட் ஆக்கியும் காட்டினார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *