Share on Social Media


ஆனால் திருமணத்துக்குப் பின்னர், என் கணவர் அமைதியாக இருந்தாலும், எந்த ஒரு விஷயத்திலும் தன் முடிவே இறுதி முடிவு என்று கொண்டு வரும் கேரக்டர் என்பது எனக்குப் புரிந்தது. ஒரு கணவராக, குடும்பத் தலைவராக தன் ஆணாதிக்க முகத்தையும் அவர் அழுத்தமாக நிறுவினார். டூர் போவது முதல் வீட்டில் பொருள்கள் வாங்குவது வரை எல்லாமே அவருடைய முடிவாகவும், தேர்வாகவும்தான் இருக்கும். ஆனால், எங்கள் இருவரது வீட்டிலும், ஏதோ இவையெல்லாம் என் இஷ்டப்படி நடப்பதாகவும், அவரை வீட்டில் நான் டாமினேட் செய்வதாகவுமே நம்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம்… வாயாடி என்று நான் வாங்கி வைத்திருக்கும் பெயர்.

Woman (Representational Image)

Woman (Representational Image)
Photo by Alex Green from Pexels

நான் வாய் பேசுவேன்தான். ஆனால் வேஷம் போடமாட்டேன். என் கணவர் தான் அமைதியானவர் என்று வேஷம் போட்டுக்கொண்டு, என்னை அடங்காத பொண்டாட்டி போலவும், தன்னை பொண்டாட்டிதாசன் போலவும் நடித்துக்கொண்டிருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. என் வீட்டிலும் அவர் வீட்டிலும், ` நம்புங்க… எங்க வீட்டுல கத்துறதுதான் நான், காரியம் எல்லாம் அவர் இஷ்டப்படிதான் நடக்குது’ என்றால், ‘உன்னைப் பத்திதான் எல்லாருக்குமே தெரியுமே, அவரு பாவம்…’ என்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *