Share on Social Media


தான் முன்னெடுத்து நடத்திய நவராத்திரி விழா குறித்துப் பேசுபவர், “உறவினர்கள், நண்பர்கள் பலரும் கொரோனா சூழலால பல மாசமா உற்சாகம் இல்லாம இருந்தாங்க. எல்லோருக்கும் புத்துணர்வு தரணும்னு, போன வருஷம் ஆன்லைன்ல நவராத்திரி விழாவை நடத்தினேன். அதுல, பக்தி, அரட்டை, கொண்டாட்டம்னு பலவும் இருந்துச்சு. அமெரிக்கா மற்றும் இந்தியாவுல இருக்கும் தோழிகளுடன், சுஹாசினி, குஷ்பு, ரேவதி, பூர்ணிமா பாக்யராஜ், பிரபு உட்பட என்னோட சினிமா நண்பர்கள் பலரும் அந்தக் கொண்டாட்டத்துல கலந்துகிட்டுப் பேசினாங்க. இந்தியாவுல நிலைமை சரியாகிட்டு வந்த நிலையில, இப்போ கொரோனா பாதிப்பு அதிகமாகியிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு.

என் பெற்றோர் சென்னையில வசிக்கிறாங்க. அவங்களையும் நண்பர்களையும் பார்க்க, வருஷத்துக்கு ஓரிரு முறை சென்னை வருவேன். கடந்த ஒரு வருஷமா சென்னைக்கு வர முடியாம, எல்லோர்கூடவும் போன்லயும் ஆன்லைன்லயும்தான் பேசுறேன். வங்கித் துறையில வேலை செய்யுற என்னோட கணவரும் ஒரு வருஷமா வீட்டுல இருந்துதான் வேலை செய்யுறார். கலிஃபோர்னியாவுல ஜூன் 15 வரை கட்டாயமா எல்லோரும் மாஸ்க் அணியணும். அதுக்குப் பிறகு, தடுப்பூசி போட்டுகிட்டவங்க மட்டும் மாஸ்க் இல்லாம வெளியிடங்களுக்குப் போகலாம்னு மாகாண அரசு சொல்லியிருக்கு. சீக்கிரமே நிலைமை சரியாகி, எல்லோரும் இயல்புநிலைக்குத் திரும்பணும்னு ஆசைப்படுறேன்” என்று நம்பிக்கையுடன் முடித்தார் ஜெயஶ்ரீ.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *