Share on Social Media


பெ.நா.பாளையம்:சின்னதடாகம் பகுதியில், சுகாதாரத்துறையினர், வீடு வீடாகச் சென்று, கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், ஒன்பது ஊராட்சி மற்றும் நான்கு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாமையொட்டி, 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.ஆனால், பெரும்பாலான இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில், பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று, விசாரித்து, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, அவர்கள் உடல் நிலையை பரிசோதித்து, அதே இடத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியினை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.சின்னதடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், வடக்கு வீதி, சின்னதடாகம் பகுதிகளில் நேற்று சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று, தடுப்பூசி செலுத்தும் பணியினை துவக்கினர். வரும் காலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் தீவிரப்படுத்தப்படும் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *