Share on Social Media


இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஓராண்டிற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணாமல், சுப்ரீம் கோர்ட் மூலமாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

விவசாயிகள் என்ற பெயரில் கம்யூ.,க்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதனால், கோர்ட் மீது கம்யூ.,க்கள் காட்டத்தை காண்பிக்கின்றனரோ!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை: தமிழகத்தில் சிமென்ட் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 120 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இந்த விஷயத்தில், அரசு அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது. சிமென்ட் விலையை ஒழுங்குப்படுத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

காரணத்தை கண்டறிந்து விலையை கட்டுப்படுத்தாமல், ஆணையம் அமைத்தால் விலை குறைந்து விடுமா? அப்படியே பெட்ரோல், டீசல், வெங்காயம், பருப்பு, அரிசிக்கும் ஆணையம் அமைக்க வேண்டி வந்து விடும்!

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: வலதுசாரி என்ற அடைமொழியோடு, தமிழக ஊடக விவாதங்களில் பங்கேற்பவர் கருத்துக்கள், பா.ஜ.,வின் கருத்துக்கள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன. அவை, பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் அல்ல. இது, பா.ஜ.,விற்கு எதிரான கருத்துக்களை திணிக்கும் தந்திரம்.

நான்கு பேரை பேச வைப்பர். அதில் மூன்று பேர், பா.ஜ.,வுக்கு எதிராக பேசுவர். ஒருவர் மட்டுமே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். இது தான் காலம் காலமாக நடந்து வருவது. இப்போது, விவாதங்கள் என்ற பெயரில், ‘டிவி’கள் இந்த கூத்தும் அடிக்கின்றனவா?

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: வங்கதேசம் உருவாக காரணமானவர், காங்கிரசைச் சேர்ந்த, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா. ஆனால், தற்போது சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் படுகொலை குறித்து, காங்., வாய் திறக்க பயப்படுகிறது.

வங்கதேச படுகொலை மற்றும் காங்., செயலை பார்த்து, இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர் அதிர்ந்து போயுள்ளனர். வெளிப்படையாக குரல் கொடுக்க முடியாமல் அமைதி காக்கின்றனர்.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: நவ., 17ல் துவங்கும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மை பாடங்களாகவும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி பாடங்கள் முக்கியத்துவம் இல்லாதவையாகவும் அறிவிக் கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் இல்லாத பாடங்களுக்கான தேர்வுகளை, அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கலாமாம். இது நியாயமல்ல!

சி.பி.எஸ்.இ., அப்படி செய்யாதே… நீங்களும் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டீர்களே… சிக்கல் வேறு எங்கோ உள்ளது. அதை கண்டுபிடிக்க வேண்டும்!

தர்மபுரி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் அறிக்கை: பெண்களை தவறாக யார் சித்தரித்தாலும், அவதுாறாக பேசினாலும் தவறு தான். அது, தி.மு.க., தொண்டர் என்றாலும் தவறு தான். மேலும் அரசிற்கு, முதல்வருக்கு நம்மால் ஒரு சிறு சங்கடமும் வரக் கூடாது.

தி.மு.க.,வின் தகவல் தொடர்பு பிரிவில் இருப்பவர்களுக்கு நன்கு உறைக்குமாறு இதை சொல்லுங்கள். பல பெயர்களில், பல சமூக வலைதளங்களில் சகட்டு மேனிக்கு எழுதுகின்றனர்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *