Share on Social Media


மகோபா: விவசாயிகளை, பிரச்னைகளில் சிக்க வைப்பதே சில அரசியல் கட்சிகளின் அடிப்படை அரசியல் கொள்கையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் மகோபா நகரில் நீர்ப்பாசன திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பண்டல்கண்ட் பகுதிக்கு என சிறப்பான வரலாறு உள்ளது. மகோபா நகரில் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. வருங்காலங்களில் 4 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்கும். இப்பகுதி மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டில்லியிலும், உ.பி.,யிலும் பல ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்கள், இந்த பகுதியின் சீரழிப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்தனர். இங்கு உள்ள வனம் மற்றும் இயற்கை வளங்கள் எப்படி ‘மாபியா’க்களுக்கு வழங்கப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். தற்போது, அந்த மாபியாக்கள் ராஜ்ஜியம் அகற்றப்பட்டதால், சிலர் அழுகின்றனர்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. உஜ்வாலா யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு பலன் அளித்துள்ளது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. விவசாயிகளை பிரச்னைகளில் சிக்க வைப்பதே சில கட்சிகளின் நோக்கமாக உள்ளது. அந்த பிரச்னையில் அவர்கள் அரசியல் செய்தனர். ஆனால், அதற்கு தீர்வு காண்பதே நமது தேசிய கொள்கை.

ஏழைகளின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பண்டல்கண்ட்டில் பல ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அணைகள் என்ற பெயரில் ஊழல் தான் நடந்தது. பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளையடித்த முந்தைய அரசுகள் மக்களை தவறாக வழிநடத்தின. தற்போது, தங்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் அரசை மக்கள் பார்க்கின்றனர். முந்தைய அரசுகள் ஓய்வில்லாமல் கொள்ளையடித்தன. ஆனால், நாங்கள் ஓய்வில்லாமல் உழைக்கிறோம்.
உ.பி., மற்றும் பண்டல்கண்ட்டின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் தடைபடாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *