Share on Social Media


புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது. இந்த பேரணியில் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் ராகுல் பேசியதாவது: வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும் வரை, போராட்டத்தை காங்கிரஸ் கைவிடாது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது. அவர்களின் வாழ்க்கையை முடித்துவிடும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இந்த சட்டம் உள்ளது. இதனால் தான் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுகிறோம். இந்த கறுப்பு சட்டங்களை பா.ஜ., அரசு திரும்ப பெற வேண்டும். கடந்த காலங்களில், மோடி அரசு, நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்ற பெயரில் விவசாயிகள் நிலத்தை பறிக்க முயன்றது. அப்போது காங்கிரஸ் தடுத்து நிறுத்தியது. தற்போது, பா.ஜ.,வும் அவர்களின் சில நண்பர்களும் மீண்டும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளன. இவ்வாறு ராகுல் பேசினார்.

முன்னதாக, வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது: தாமதபடுத்தும் தந்திரமாகவே, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தனக்கு அதிகாரம் உள்ளது. விவசாயிகளை சோர்வடைய செய்ய முடியும் என பிரதமர் நினைக்கிறார். இது தவறு. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மரியாதையை கூட அளிக்க மோடி மறுக்கிறார். 100 விவசாயிகள் இறந்தாலும் கவலைப்பட மாட்டார். தனக்கு அதிகாரம் உள்ளது. சில நாட்கள் போராட்டம் நடத்தி விட்டு விவசாயிகள் சோர்வடைந்து சென்று விடுவார்கள் என மோடி நினைக்கிறார். ஆனால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed