Share on Social Media


விலங்குகளின் நல்வாழ்வுக்காகச் செயல்படுகின்ற பீட்டா அமைப்பு, அமுல் நிறுவனத்தை பசும் பால் உற்பத்தியிலிருந்து வீகன் பால் உற்பத்திக்கு மாற வேண்டும் என்று கோரியுள்ளது. வீகன் பால் என்பது பசு, எருமை போன்று மற்ற உயிரினங்களிடமிருந்து பெறும் பால் போல இல்லாமல், முழுக்க முழுக்க தாவரங்களில் இருந்தே தயாரிக்கப்படுவது. அதாவது முற்றிலும் தூய்மையான சைவப் பால் என்று இதைச் சொல்வார்கள்.

Amul

அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஆர்.எஸ்.சோதிக்கு பீட்டா நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், “இருக்கின்ற வளங்களை வீணாக்குவதற்குப் பதிலாக, வளர்ந்து வருகின்ற வீகன் உணவு மற்றும் பால் உற்பத்திக்கான சந்தையைப் பயன்படுத்திப் பலனடைய வேண்டும். மற்ற நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். அமுல் நிறுவனமும் இதில் கவனம் செலுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்வதேஷி ஜக்ட்ரன் மன்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த அஷ்வனி மஜாஜன் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “பால் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெருவாரியான விவசாயிகள் நிலமற்றவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா! உங்களுடைய தொழில் வடிவம் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு இருக்கும் ஒரேயொரு வழியையும் அழித்துவிடும். பால் தான் நம்முடைய நம்பிக்கை, நம்முடைய மரபு, நம்முடைய உணவுப் பழக்கத்தில் ஊட்டச்சத்து வழங்குவதில் அது மிகவும் எளிய ஓர் ஆதாரமாக எப்போதுமே இருந்துவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அமுலின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி பதிவிட்டிருந்த ட்வீட்டில், “75 ஆண்டுகளாக விவசாயிகளின் பணத்தில் வளர்ந்து நிற்கும் இந்த நிறுவனம், இப்போது 100 மில்லியன் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் சோயா உற்பத்தியில் தயாரிக்கப்படும், நடுத்தர குடும்பங்களால் வாங்கமுடியாத வீகன் பால் தயாரிக்க வேண்டும் என்று பீட்டா நிறுவனம் சொல்கிறது.

பால் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் 100 மில்லியன் விவசாயிகளுடைய (அதில் 70 விழுக்காடு விவசாயிகளிடம் சொந்தமாக நிலம் இல்லை), குழந்தைகளின் பள்ளிப் படிப்பிற்கு யார் பணம் கொடுப்பார்கள். அவர்களில் எத்தனை பேரால், விலை உயர்ந்த, தொழிற்சாலைகளில் ரசாயனங்களின் உதவியோடு உருவாக்கப்படும் செயற்கையான பாலை வாங்கமுடியும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *