Share on Social Media


புதுடில்லி: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம், நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலங்களைக் கொண்ட அனைத்து சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வருமான ஆதரவை வழங்கும் ஆகும். இத்திட்டம் துவங்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தொடர்ச்சியான டுவீட்டுகளில், ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது,’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டதாவது: இதே நாளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பி.எம்-கிசான் திட்டம் கண்ணியமான வாழ்க்கையையும், நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு செழிப்பையும் உறுதிசெய்யும் நோக்கில் துவங்கப்பட்டது. அவர்கள் நம் தேசத்திற்கு உணவளிக்க இரவும் பகலும் உழைக்கிறார்கள். விவசாயிகளின் உறுதியும் ஆர்வமும் தான் நமக்கு ஊக்கமளிக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில், இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. சிறந்த நீர்ப்பாசனம் முதல் அதிக தொழில்நுட்பம், அதிக கடன் மற்றும் முறையான பயிர் காப்பீடுக்கான சந்தைகள் வரை, மண்ணின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, இடைத்தரகர்களை அகற்றுவது ஆகிய முயற்சிகள் அனைத்தையும் எடுத்துள்ளது. பயிர்களை கொள்முதல் செய்வதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு செய்த பெருமை எங்களது அரசிற்கு உண்டு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *