Share on Social Media


நீர்ப்பாசனம்

ஆந்திர மாநில `ஜலயக்ஞம்’ (2003 – 2013) மற்றும் தெலங்கானா மாநில `மிஷன் காகதீய’ போன்று தமிழ்நாட்டிலும் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகள், கண்மாய்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தயாரித்து 5 ஆண்டுகளில் நடைமுறைப் படுத்த வேண்டும். இதனால் முழுமழைநீரைச் சேமித்து ஏரிகளின் நீர்ப்பிடிப்புக் கொள்ளளவை அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை ஏற்படும். காவிரி பாசனப் பகுதிகளில் கல்லணைக்குக் கீழே பூம்புகார் (நாகை) வரை எத்தனை ஆறுகள், கிளையாறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் உள்ளன, எங்கெங்கே தடுப்பணை கட்ட வேண்டும், எங்கெங்கே சீர்ப்படுத்த வேண்டும், எங்கெங்கே கடல்நீர் உள்ளே வராமல் தடுக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து 5,100 கோடியில் விரிவான திட்டத்தைத் தயாரித்து 2008-ம் ஆண்டில் அளித்துள்ளார் பொறியாளர் மோகனகிருஷ்ணன் (காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர்). இதை 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் நிறைவேற்றிட முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 2020-ம் ஆண்டில் இத்திட்டத்தின் மதிப்பீடு சுமார் 12,000 கோடி ஆகும். இத்திட்ட அறிக்கை அரசிடமே உள்ளது. அதைக் கையில் எடுக்க வேண்டும். கொள்ளிடத்தின் கீழே நொச்சியம், கூகூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கோடாலிக் கருப்பூர் மற்றும் அணைக்கரை ஆகிய ஏழு இடங்களில் கதவணைகள் (மின்வாரியத்துடன் இணைந்து) கட்டி வீணாகும் வெள்ளநீரைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்க வேண்டும். பாலாற்றைத் தூய்மைப்படுத்தி முன்பே திட்டமிடப்பட்டுள்ள 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டி வெள்ளநீரைச் சேமித்து நிலத்தடி நீரைப் பெருக்கிக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் பராமரித்தல், இதற்கென ரூ.150 கோடி செலவாகும். இதைத் தனிச் சிறப்புத் திட்டமாக (இரு ஆண்டுகளில்) நிறைவேற்றல்.

நீர்நிலைகள் பராபமிரிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு:

ஏரிகள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் என நீர் கட்டமைப்புகளின் பாதுகாப்பு, பராமரிப்பு என வேளாண்மை நிதியில் முதலிடம் அளிக்கப்பட வேண்டும். ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் இருந்து வண்டல் மண் எடுத்து பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். வண்டல் எடுக்க விரும்புபவர்களுக்கு இருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஏக்கருக்கும் ஒரு பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்துதல்

நிலம் எடுப்பு திட்டங்களையும், அனுபவ உரிமை எடுப்பு திட்டங்களையும் செயல் படுத்துவதற்கு முன்பு 2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டம் பிரிவு 26 (3rd proviso) கீழ் பாதிக்கப்படும் அனைத்து நிலங்களுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் சந்தை மதிப்பை நிர்ணயித்த பின்பே இழப்பீட்டை நிர்ணயம் செய்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். புதிய நிலம் எடுப்பு சட்டத்தில் நிலம் எடுப்பு பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு பாதிக்கப்பட உள்ள அனைத்து நிலங்களின் வழிகாட்டி மதிப்பை சந்தை மதிப்புக்கு இணையாக உயர்த்தி நிர்ணயம் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த வேண்டும்.

நீர்வளத்துறை துரைமுருகன்

நீர்வளத்துறை துரைமுருகன்

பயிர்வாரி முறை

அரசு துறைகளால் மறந்துபோன தமிழ் வழி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றுள்ள ஐந்து வகை நிலப் பாகுபாடுகளைப் பட்டியலிட்டு அந்தந்த நிலங்களில் பயிரிடக் கூடிய பயிர் வகைகளை வரிசைப்படுத்தி உழவர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

தனித்தனி கிடங்குகள்

ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை இருப்பு வைக்கும் குடோன்களிலேயே விவசாய விளைபொருள்களையும் வைக்கிறார்கள். இது ஆபத்தானது. விளைபொருள்களுக்கு எனத் தனியாகக் கொள்கலன் சரக்கு நிலையம் (Container Fright station) அமைக்க மாநில அரச ஆவன செய்ய வேண்டும்.

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய விவசாயம் சார்ந்துரைகள் குறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “நஞ்சில்லா உணவு உற்பத்திக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்த நம்மாழ்வாருக்கு கல்லணை பகுதியில் நினைவு மண்டபமும், இயற்கை வேளாண் பயிற்சி மையமும் அமைக்க வேண்டும். சத்தீஸ்கரில் இருப்பது போல் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து மையங்கள் அமைக்க வேண்டும்’’ என்றார்.

தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், “விவசாயத்துக்கென தனி பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது. இதற்கென தனியாகக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கேரளாவில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் விவசாய கடன் நிவாரண கமிஷன் அமைக்க வேண்டும். இயற்கை சீற்றம் உள்ளிட்ட பாதிப்புகளால் இழப்பு ஏற்பட்டால், ஒரு தனி விவசாயி கூட இங்கு முறையிட்டு, பாதிப்புக்கு ஏற்ற அளவில் தள்ளுபடி பெறலாம்’ என்றார்.

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம், “தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான ஓடைகள் உயிர்ப்புடன் இருந்தன. மூன்று நான்கு மாதங்களுக்கு அதில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். பசுமை புரட்சியின் விளைவாக, மண்ணில் ரசாயனத்தன்மை அதிகரித்தால் ஓடைகள் செயலிழந்துவிட்டன. தமிழக நீர்வளத்துறை, அதை மிட்டெடுத்து உயிர்ப்பிக்க வேண்டும்’’ என்றார்.

மொத்த பரிந்துரைகள் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன…Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *