Share on Social Media


சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்:

சமூக ஆர்வலரும், பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான ஸ்டேன் சுவாமி காலமானார். மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர் பிரிந்தது.

வசதிகளின்றி கட்டடம் கூடாது:

மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்றி அரசு கட்டடங்கள் கட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 வங்கிக் கணக்குகள் முடக்கம்:

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் 30 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. கொள்ளை கும்பல் தலைவனை 7 ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வழக்கு – மத்திய அரசுக்கு உத்தரவு:

நீட் தேர்வு பாதிப்பை ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜகவின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருப்புப் பூஞ்சையால் 30 பேர் கண் பார்வை இழப்பு:

கோவை மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 30 பேர் ஒரு கண்ணில் பார்வையை இழந்தனர். சிகிச்சைக்கு தாமதமாக வந்ததால் கண் பார்வையை இழந்ததாக அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகாவில் புதிய அணை – கட்டுமானப் பணியில் தமிழர்கள்:

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஓசூர், தளி, கிருஷ்ணகிரி பகுதி நிறுவனங்களில் இருந்து கட்டுமான பொருட்கள் சென்றது புதிய தலைமுறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நதிநீர் பிரச்னை குறித்து பேச உள்ளேன்:

மேகதாது, மார்க்கண்டேய நதி அணைகள் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் செகாவத்துடன் பேச உள்ளேன் என தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

கொரோனா சவாலை தனியாக எதிர்கொள்ள முடியாது – பிரதமர்:

கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான ‘கோவின்’ தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்கத் தயார் எனவும், கொரோனா போன்ற சவால்களை தனியாக எதிர்கொள்ள முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி உரையில் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிராவில் 12 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்:

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக 12 பாஜக எம்எல்ஏக்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

தமிழக மீனவர்கள் மீது 2-வது நாளாக தாக்குதல்:

தமிழக மீனவர்கள் மீது 2-வது நாளாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். கற்களைக் கொண்டு எரிந்ததோடு, வலைகளை வெட்டியும் அட்டூழியம் செய்துள்ளனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *