Share on Social Media


>ரூ.2000, 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்! கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்படுகிறது.

>தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி – உச்ச நீதிமன்றம் கேள்வி. தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் செலவிடப்பட்ட விவரம் என்ன? என மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

>ஒரே நாளில் மேலும் 25,317 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் 483 பேர் உயிரிழந்துள்ளனர்.

>தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

>பராமரிப்புக்கான மின் தடை ஒத்திவைப்பு. பராமரிப்பு பணிகளுக்காக செய்யப்படும் மின் தடை, ஊரடங்கு காலத்தில் இனி செய்யப்படாது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றுவோர் பாதிக்கப்படாமல் இருக்கவும், ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதாலும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

>+2 பொதுத்தேர்வு ரத்தா? ஓரிரு நாளில் முடிவு. தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பொதுமக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

>”நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?” சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யுமா? என கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

>”ஜூன் ஒதுக்கீட்டில் முன்னுரிமை தருக” தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஜூன் மாத ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு முன்னுரிமை தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

>முன்ஜாமீன் கோரினார் முன்னாள் அமைச்சர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் காவல்துறை தேடும் நிலையில் மனு தாக்கல் செய்துள்ளார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *