Share on Social Media


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழக முதல்வரை அவமரியாதையாகப் பேசினால் பெரிய ஆளாகிவிடலாம் என, அவரை அவமரியாதையாக பேசச் சொல்லி, தி.மு.க-வில் தனக்குக் கீழ்உள்ள தலைவர்களிடம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். தி.மு.க-வின் கீழ்மட்டத் தலைவர்கள் முதல்வரை அவமரியாதையாகப் பேசவில்லை. ஸ்டாலினின் வாய்மொழி உத்தரவுதான் அவ்வாறு பேச வைக்கிறது. ஆ.ராசாவும் அப்படித்தான் பேசுகிறார்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க-வினரின் அநாகரிகப் பேச்சுகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். முதல்வருக்கு சவால்விட்டுப் பேசும் அளவுக்கு தி.மு.க-வில் எந்த எம்.எல்.ஏ-க்களுக்கும் தகுதி கிடையாது. ராஜபாளையத்தில் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் என்று, தி.மு.க-வினர் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தி.மு.க-வும் வன்முறையும் வேறு வேறு அல்ல. வன்முறையும், கலவரமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞரிடம் தி.மு.க சென்றபிறகு கலவரமும் சேர்ந்து கொண்டது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *