Share on Social Media


விருதுநகர்:-விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரியில் ராம்கோ நிறுவனம் சார்பில் 3000 மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவங்கி வைத்தனர்.

விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரியில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்த நிலையில், கல்லுாரி வளாகத்தை பசுமையாக மாற்றும் விதமாக மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி 3000 மரக்கன்றுகளை மருத்துவ கல்லுாரி நிர்வாகத்துடன் இணைந்து நட ராம்கோ நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதற்கான துவக்க விழா கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவங்கி வைத்தனர். மருத்துவ கல்லுாரி டீன் சங்குமணி, துணை முதல்வர் அனிதா மோகன், டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், ராம்கோ சிமென்ட்ஸ் மூத்த உபதலைவர் ராமலிங்கம், மூத்த பொது மேலாளர் மணிகண்டன், துணை பொது மேலாளர் ராமச்சந்திரன், ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *