Share on Social Media

புதுடில்லி: ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இருந்து இந்திய வீரர் வினோத் தன்வர், ‘கொரோனா’ தொற்று உறுதியானதால் விலகினார்.

துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நாளை துவங்குகிறது. இதில் பங்கேற்க, 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் (51 கி.கி.,), அமித் பங்கல் (52 கி.கி.,), பூஜா ராணி (75 கி.கி.,) உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி, பாதுகாப்பு வளையத்திற்குட்பட்ட தனி விமானத்தில் துபாய் சென்றனர்.

இத்தொடருக்கான இந்திய அணியில், தெற்காசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய வீரர் வினோத் தன்வர் (49 கி.கி.,) இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் இவருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானதால் இப்போட்டியில் இருந்து விலகினார். தற்போது இவர், பாட்யாலாவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘கொரோனா தொற்று உறுதியானதால் வினோத் தன்வர், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகினார். மற்றவர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்ததால் இவரை தொடர்பு கொள்ளவில்லை. இவருக்கு மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை,’’ என, தெரிவித்திருந்தது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *