Share on Social Media


அத்தீர்ப்பில், ‘’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது” எனக் கடுமைகாட்டியிருப்பதோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார்.

‘‘இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும்’’ என்றும் சொல்லியிருக்கிறார் நீதிபதி.

நடிகர் விஜய் ஒரு கார் பிரியர். புது மாடல் கார்கள் வந்தால் அதை உடனடியாக வாங்கிப் பயன்படுத்தும் ஆர்வம் கொண்டவர். நிஸான் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வராதபோதே அதை வாங்கியவர் விஜய். மாருதி ஸ்விஃப்ட்டில் தொடங்கி டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா, ஆடி A8, மினிகூப்பர், ரேஞ்ச்ரோவர் இவோக், பிஎம்டபிள்யூ X6, 7 சீரிஸ், ஃபோர்டு மஸ்டாங், பென்ஸ் GLA என்று ஏகப்பட்ட கார் கலெக்ஷன் வைத்திருக்கிறார் விஜய்.

விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ்

விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ்

அப்படித்தான் 2012–ல் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் ‘கோஸ்ட்’ எனும் சொகுசு காரையும் வாங்கினார் விஜய். ரோல்ஸ்ராய்ஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம். ஆனால், இப்போது ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ குழுமத்தின் அங்கமாக இருக்கிறது. அதனால், இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது டீலர்ஷிப்புகள் மூலம்தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *