Share on Social Media


‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தறுவாயில் இருந்தபோதே, விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் இயக்குநர் மகிழ் திருமேனியின் பெயர் எழுந்தநிலையில், அவர் உதயநிதியின் படத்தை முடிக்காமல் அடுத்தப் படத்தை ஆரம்பிக்க முடியாது என்பதால், அந்த வாய்ப்பு ‘சூரரைப் போற்று’ இயக்குநர் சுதா கொங்கராவுக்கு சென்றது. சுதா சொல்லிய ஒன்லைன் விஜய்க்குப் பிடித்திருந்தாலும், உடனே படத்தை ஆரம்பிக்க முடியாது என்பதால், அந்த வாய்ப்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு மாறியது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

‘விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் – இசையமைப்பாளர் தமன்’ என இந்தக் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான சமயத்தில், திடீர் திருப்பமாக இந்தப் படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். அதனால், இந்த படத்தின் இயக்குநராக தற்போது நெல்சன் திலீப்குமார் உறுதி செய்யப்பட்டிருக்கிறார். இசையமைப்பாளராக அனிருத் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்தப் படத்திற்கு ‘டார்கெட் ராஜா’ என பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. டிசம்பர் 31-ம் தேதி இந்தப் படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *