Share on Social Media

துபாய்: ‘‘ஆசிய குத்துச்சண்டையில் தங்கம் வென்றது என் வாழ்வின் சிறந்த தருணம்,’’ என, சஞ்ஜீத் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், 91 கி.கி., எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத் தங்கம் வென்றார். இவர், பைனலில் வீழ்த்திய கஜகஸ்தானின் வாசிலி லெவிட், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றனர். தவிர இவர், ஆசிய சாம்பியன்ஷிப் (3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), உலக சாம்பியன்ஷிப் (2 வெள்ளி) போட்டிகளிலும் பதக்கங்களை அள்ளியவர்.

இதுகுறித்து சஞ்ஜீத் கூறியது: ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது என் வாழ்வின் சிறந்த தருணமாக கருதுகிறேன். பைனலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரை வீழ்த்தியது தனிச்சிறப்பு.

எனது சகோதரரை பார்த்து தான் குத்துச்சண்டை போட்டிக்குள் நுழைந்தேன். தற்போது அவர் தான் எனக்கு பயிற்சியாளராக உள்ளார். படிப்பதில் இருந்து தப்பிக்கவே குத்துச்சண்டை போட்டியை தேர்வு செய்தேன்.ஏனெனில் எனக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லை. ஆனால் என் பெற்றோர்கள் நான் படிக்க வேண்டும் என்று விரும்பினர். இதுகுறித்த என் முடிவை தெளிவாக தெரிவித்துவிட்டேன். மாநில அளவில் பதக்கம் வென்ற பின் அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். என்னால் அவர்கள் பெருமை அடைந்தனர்.

இவ்வாறு சஞ்ஜீத் கூறினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *