Share on Social Media


எனக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை. எல்லா பெண்களையும் போலவே கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த எனக்கு, ஏமாற்றமும் விரக்தியுமே நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. காரணம், என் நாத்தனார்.

என் கணவர் வீட்டில் அவர், அவரின் தங்கை என இரண்டு பிள்ளைகள். அப்பா இல்லாத குடும்பத்தைக் கணவர்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார். தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்துச் சிறப்பாகத் திருமணத்தையும் முடித்திருக்கிறார். எங்கள் திருமணத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்னர்தான் என் நாத்தனார் திருமணம் முடிந்திருக்கிறது. ஆனால், அவர் கணவர் ஒரு மனநலம் பிறழ்ந்தவர் என்பது சில மாதங்கள் சென்ற பிறகுதான் என் நாத்தனாருக்குத் தெரியவந்திருக்கிறது. என்றாலும், அதை அவர் பிறந்த வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்.

இந்நிலையில், எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத் தேதியும் குறிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், இனி வாழவே முடியாது என்ற நிலையில் என் நாத்தனார் தன் கணவர் பற்றித் தன் வீட்டில் சொல்ல, அதிர்ந்துபோயிருக்கிறார்கள் என் மாமியாரும் கணவரும். `நீ வாழலைன்னாலும் பரவாயில்ல, வீட்டுக்கு வந்துடு’ என்று அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில், ஏற்கெனவே நிச்சயக்கப்பட்ட எங்கள் திருமணம் நடந்து முடிந்தது.

புதிதாகத் திருமணமாகி நான் கனவுகளுடன் வர, ஆனால் என் புகுந்த வீட்டு சூழலோ என் நாத்தனாரின் திருமணப் பிரச்னைகளால் சோகம் அப்பிக் கிடந்தது. காவல் நிலைய பஞ்சாயத்துகள், அவருக்கு சீதனமாகக் கொடுத்த பொருள்களை திரும்பப் பெறுவது, விவாகரத்து வழக்கு பதிவது என என் கணவரும் மாமியாரும் அலைந்துகொண்டிருக்க, என் நாத்தனார் விரக்தி மனநிலையில் இருந்தார். இவர்களுக்கு மத்தியில் நான் புதுமணப் பெண் எதிர்பார்ப்புகள், சந்தோஷங்கள் எதையும் வெளிக்காட்ட வழியில்லாமல் விழுங்கியபடி வாழ ஆரம்பித்தேன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *