Share on Social Media


திருக்கனுார் : வாதானுார் ஏரி உபரிநீர் வெளியேறும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரி கிராம மக்கள், பி.எஸ்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம் களத்து மேடு பகுதி யில், இருளர் சமுதாயத்தினருக்கு வருவாய்த் துறை மூலம் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. மனைப்பட்டா வழங்கிய இடத்தின் அருகேயுள்ள பி.எஸ்.பாளையம், வாதானுார் ஏரியில் இருந்து, தமிழக பகுதிக்கு செல்லும் வடிகால் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருகின்றனர்.

இதனால் மழை காலங்களில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற வழியின்றி, அருகிலுள்ள விவசாய நிலங்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில், ஏரி உபரிநீர் வடிகால் வாய்க்கால் உட்பட இப்பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வலியுறுத்தி, பி.எஸ்.பாளையம் கிராம மக்கள் நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் மீது பாய்ச்சல்உண்ணாவிரத போராட்டத்தில், முதல்வர் ரங்க சாமியின் அண்ணனும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் மாமனாருமான ஆதிகேசவன் பேசியதாவது:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், துார் வாரவும் அரசு மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தாலும், அதிகாரிகள் கேட்பதில்லை.நீர்நிலைகளுக்கான வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதால், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி விவசாய நிலங்களில் தேங்கி விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகையால், அரசும், அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு, நீர்நிலைகளை துார் வாரி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.