Share on Social Media


கோல்கட்டா:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஓட்டளிக்கும்படி, எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மிரட்டுவதாக, தலைமை தேர்தல் ஆணையத்திடம், திரிணமுல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

மிரட்டல்

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான அதிகாரிகள், மூன்று நாள் பயணமாக, நேற்று முன்தினம் கோல்கட்டா வந்தனர்.

சட்டசபை தேர்தல் தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர்.தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பின், ஆளும் திரிணமுல் காங்.,கின் பொதுச் செயலர் பார்த்தா சாட்டர்ஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:வரும் சட்டசபை தேர்தலில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஓட்டளிக்கும்படி, வங்கதேச எல்லையில் வசிப்பவர்களை, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மிரட்டுகின்றனர்.


கோரிக்கை

கிராமம் கிராமமாக சென்று, மக்களை சந்தித்து, ‘ஆண்டு முழுதும், நாங்கள் தான் உங்களை பாதுகாக்க வேண்டும். ‘எனவே, நாங்கள் சொல்லும் கட்சிக்கு ஓட்டளியுங்கள்’ என, மிரட்டல் விடுக்கின்றனர். இது தொடர்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, தலைமை தேர்தல் கமிஷனரிடம் கோரிக்கை வைத்தோம்.இவ்வாறு, அவர் கூறினார்.திரிணமுல் காங்.,கின் குற்றச்சாட்டை, எல்லைப் பாதுகாப்பு படை மறுத்து உள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *