Share on Social Media


ஏற்கனவே போக்குவரத்துத்துறை பணியில் அதிக ஊதியம் வாங்கி வரும் சிலர், அதைவிட 50 சதவிகிதம் ஊதியக்குறைவான இந்தப் பதவிக்குத் தேர்வெழுதி, தேர்வு செய்யப்பட்ட 226 பேரில் இடம் பெற்றுள்ளனர். அப்படி என்றால் இப்பதவியில் எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பது தெரிகிறது. மக்கள் பாதுகாப்பு சம்மந்தமான பணியில் இப்படி தேர்வு நடந்தால் ‘இந்தியன்’ படத்தில் வரும் வாகன ஆய்வாளர்கள் போலத்தான் இருப்பார்கள். நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் இத்தேர்வில் குளறுபடி தொடர்கிறது. இதை புதிய அரசு விசாரணை நடத்தி முறைகேடு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்றார்.

ஆர்.டி.ஓ அலுவலகம். (பைல் படம்)

ஆர்.டி.ஓ அலுவலகம். (பைல் படம்)

உயர்நீதிமன்றத்தால் பணி நியமனஆணை ரத்து செய்யப்பட்ட 32 பேரில் சிலரிடம் பேசினோம்,“டிஎன்பிஎஸ்சி விதிகளின்படி கல்வி, அனுபவம் அடிப்படையில் 33 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டோம். அழைக்கப்படாதவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்கால தீர்ப்புக்கு எதிராக டிஎன்பிஎஸ்சி மேல்முறையீடு செய்ததில் 33 பேரைத்தவிர மற்றவர்களுக்கு தகுதிகள் சரியாக இல்லை என்று தெரிவித்தார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டதால் 32 பேருக்கு 11.4.19-ல் பணி ஆணை வழங்கப்பட்டது.

அரசுப்பணியில் இருந்தவர்களைத்தவிர மீதி 24 பேரும் பார்த்த வேலையை விட்டுவிட்டு காத்திருந்தோம். அந்த நேரத்தில்தான், தேர்வான 33 பேரையும் ரெஸ்பான்டண்டாக சேர்த்து சிங்கிள் பெஞ்ச் வழக்கில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் வந்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *