Share on Social Media


புதுடில்லி : ”லோக்சபாவுக்கு 2024ல் நடக்கவுள்ள தேர்தலில் பா.ஜ. வை எதிர்க்கும் சக்தியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலுவாக இருக்கும்” என சத்தீஸ்கர் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் கூறினார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பேசியதாவது:

திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவுக்கு தேசிய அளவில் பெரிய தலைவராக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது; அதில் தவறில்லை.அதற்கு பா.ஜ.வுக்கு எதிராக அவர் தீவிரமாக செயல்பட வேண்டும். ஆனால் காங்கிரசுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். ஐ.மு. கூட்டணி மறைந்துவிட்டது என மம்தா கூறுகிறார். லோக்சபாவுக்கு 2024ல் நடக்கும் தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிரான வலுவான சக்தியாக ஐ.மு. கூட்டணி இருக்கும். பா.ஜ.வுக்கு எதிரான பிரதமர் வேட்பாளரையும் ஐ.மு.கூட்டணி தான் தேர்வு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *