Share on Social Media


மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே பவர் ஸ்டார் சீனிவாசன் வலியும் வேதனையுமாக பேசும் வீடியோ ஒன்று திடீரென வைரலானது. ‘லத்திகா’ படத்தின் மூலம் தயாரிப்பாளர், நடிகராக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மூலம் நகைச்சுவையில் கவனம் ஈர்த்தார். இப்போது வனிதா விஜயகுமாருடன் ஒரு படத்தில் நடித்து, தயாரித்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்தார். அதன் பிறகு இப்போதுதான், அவரை பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.

power star srinivasan

வீடியோ பார்த்ததும், பவர் ஸ்டாரிடம் பேசினேன். போனை அவரே எடுத்து பேசுகிறார். மிக மென்மையான குரலில்..

”அந்த வீடியோ நான் பேசினதுதான். ஆறு மாசத்துக்கு முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மயக்கம் போட்டு கீழ விழுந்தேன். அதன்பிறகு உடம்பை கவனிக்காமல் அப்படியே விட்டுட்டேன். அப்புறம் திடீர் திடீர்னு வலி பின்னியெடுத்து நடக்க முடியாமல் போயிடுச்சு. நாலு நாட்களுக்கு முன்னாடி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். இங்கே வந்த பிறகுதான், தண்டுவடத்தில் கிராக் ஆகியிருக்கற விஷயம் தெரிய வந்துச்சு. வலியா இருக்கு. சிகிச்சை எடுத்துட்டு இருக்கேன். நாளை காலை டிஸ்சார்ஜ் ஆகிடுவேன்னு சொல்லியிருக்காங்க. நல்லபடியா வீடு திரும்புவேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *