Share on Social Media


ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த வீடியோவில், நடிகர் அஜித் குமார் பைக்கில் வீலிங் செய்தபோது தவறி கீழே விழுந்த காட்சியும் இருக்கின்றது. ஏற்கெனவே, அஜித்துடன் பல படங்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்பராயன்தான் இந்தப் படத்திற்கும் ஸ்டன்ட் கோரியோகிராஃபர். இந்த வீடியோ பார்த்ததிலிருந்தே இவரின் பங்கு ‘வலிமை’ படத்தில் எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

“ஷூட்டிங் ஸ்பாட் 5 கி.மீ தள்ளியிருந்தது. நான், என் டீம், நிரவ் ஷா சார் மட்டும்தான் இருந்தோம். இயக்குநர் வினோத் ஸ்பாட்ல இருந்தார். அஜித் சார் பைக்ல சேஸ் பண்ணி வர்றதை எடுக்கலாம்னு பிளான் பண்ணினோம். நானும் நீரவ் ஷா சாரும் எதிர்ல இருக்கிற ரோட்ல கேமரா வெச்சுட்டு அஜித் சார் வர்றதை ப்ரோஃபைலா எடுத்துக்கிட்டே வந்தோம். அன்னிக்கு போர்ஷன்ல அதுதான் கடைசி ஷாட். எனக்கு முன்னாடியே ஷாட் ஓகே. ஆனா, அஜித் சார்தான் இன்னொரு முறை பண்றேன்னு ஒன் மோர் கேட்டார். அவர் 110 கிமீ வேகத்தைத் தொட்டிருப்பார். ரோட்டுல இருந்த சின்ன கல் அவரைத் தவறி கீழே விழ வெச்சிடுச்சு. அவர் விழுந்தவுடனே எங்க எல்லோருக்கும் பயமாகிடுச்சு. உடனே, வண்டியை நிறுத்துட்டு, வேகமா ஓடிப்போய் அவரைத் தூக்கினோம். அதுக்குள்ள அவராவே எழுந்துட்டார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *