Share on Social Media


திருமங்கலம் – மதுரை — கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் எதிர்திசையில் வரும் வாகன முகப்பு விளக்குகளின்ஒளி எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் மீது படாதவாறு ரோடு நடுவில் வழிநெடுக நடப்பட்ட அரளிச் செடிகள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

இப்பூக்கள் ஏராளமானவர்களின் பசியை போக்குவதாக மாறியுள்ளன.கார்த்திகை, மார்கழியில் அரளி பூக்களின் தேவை அதிகரிக்கும். மார்க்கெட்டுக்களில்அரளி மொட்டு கிலோ ரூ. 400 வரையும், மலர்ந்த பூக்கள் கிலோ 100 வரையும் விற்கின்றன.

விழாக்காலங்களில் விலை மேலும் அதிகரிக்கும்.சமத்துவபுரம், மேலக்கோட்டை, சிவரக்கோட்டை பகுதியினர் இப்பூக்களை பறித்து, மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். தினமும் ஒவ்வொருவரும் 5 கிலோ பூக்கள் வரை விற்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *