Share on Social Media


ஏன்…ஐ.டி நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் நாங்கள் உரையாடும்போது, அனைவரும் தமிழ் தெரிந்தவர்களாக இருந்தால், தமிழில்தான் பேசிக்கொள்வோம். காரணம், தாய்மொழியில் உரையாடும்போது எங்களுக்கு தொழில்நுட்பம் குறித்து இன்னும் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. கிரியேட்டிவ்வாக யோசிக்க முடிகிறது. வேலைகளை மிக வேகமாக செய்து முடிக்க அது உதவுகிறது. ஆனால், மக்கள் மனநிலையில் ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அது ஒரு மாயபிம்பம்தான். கான்செப்ட்தான் முக்கியமே தவிர மொழி என்பது கம்யூனிகேஷனுக்காக மட்டும்தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பொறியியல், மருத்துவம் போன்ற பாடங்கள் தமிழ்வழியில் வருவது எதிர்காலத்துக்கு நல்லது. அதுதான் பரந்துபட்ட பெரிய அளவிலான மக்கள் திரளுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் அவர்.

பொறியியல் மாணவர்கள்

பொறியியல் மாணவர்கள்

பொறியியல் கல்லூரி உதவிப்பேராசியர் ஒருவர் பேசும்போது,

” கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், தமிழ்வழியில் பாடங்கள் இருந்தால் நாங்களும் பொறியியல் படிப்போம் எனக் கூறியதாகவும் அதனாலேயே பிராந்திய மொழிகளில் கொண்டு வரப்படுவதாகவும் பார்த்தேன். இது மிகவும் நல்ல விஷயம்தான். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், புரிந்து படிப்பதற்கும் விஞ்ஞானிகளாக பலர் உருவெடுப்பதற்கு இது உதவும். ஏற்கெனவே, தமிழ்நாட்டில், மெக்கானிக்கல் பிரிவுகள் தமிழ் வழியில் இருந்தாலும் ஒரு சில அரசுக் கல்லூரிகளில் மட்டும்தான் அந்த வசதி இருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் அனைத்துக் கல்லூரிகளிலும் வந்தால் மாணவர்கள் அதிகமான எண்ணிக்கையில் பொறியியல் படிப்புகள் சேருவார்கள். தமிழ் வழியில் அவர்கள் பாடங்களைப் படித்தாலும் கம்யூனிகேஷனுக்காக ஆங்கிலம் தேவையாக இருக்கிறது. அதனால், கல்லூரிகள் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.

தமிழகத்தில் ஈரோடு செங்குந்தர் கல்லூரியும், கோயம்புத்தூர் ரத்தினம் பொறியியல் கல்லூரியும் விண்ணபித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை கற்பிக்க விரும்பும் கல்லுாரிகள், என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரியாகவும், மாநிலத்தின் முன்னணி கல்லுாரிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள கல்லுாரியாகவும் இருக்க வேண்டும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன. அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகள் என்.பி.ஏ அங்கீகாரம் பெறாத கல்லூரிகள்தான். எனில் இந்த அறிவிப்பு வந்தும் பெரிய பயனில்லை என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *