Share on Social Media


‛வரலாறு’ பார்த்து வந்த ‛பழசிராஜா’ – மனம் திறக்கும் நடிகை கனிகா

20 ஜூன், 2021 – 09:01 IST

எழுத்தின் அளவு:


மதுரைக்கார பொண்ணுனா சும்மாவா… நாங்களும் நடிப்பில் கலக்குவோம்ல என ‛5 ஸ்டார்ல் அறிமுகமாகி டாப் ஸ்டாராக உயர்ந்து, சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் ‛யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் ‛கம்பேக் கொடுத்துள்ள நடிகை கனிகா மனம் திறக்கிறார்….

* மதுரை பொண்ணு கனிகா திரைப்பயணம் பற்றி சொல்லுங்க
பிட்ஸ் பிலானியில் இன்ஜினியரிங் படித்த போது மிஸ் சென்னையில் பாடும் வாய்ப்பு கிடைச்சது. அந்த போட்டியில் ஒருவர் வர முடியாததால் நான் பங்கேற்று வெற்றி பெற்றேன். நிறைய அட்டை படங்களில் என் போட்டோக்கள் வெளியானது. தினமலர் பெரிய சப்போர்ட் பண்ணினாங்க.

* முதல் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி வந்தது

பாய்ஸ் படத்தில் தான் முதல் வாய்ப்பு. ஆனால் காலேஜ் போக வேண்டியதால் பண்ண முடியல. மணிரத்னம் தயாரிக்க, சுசி கணேசன் இயக்க5 ஸ்டார் படத்தில் விடுமுறையில நடிச்சிட்டு போனேன்.

* பாக்கிய தேவதா, பழசிராஜா மலையாள படங்கள் குறித்து

இரண்டும் ஒரே ஆண்டில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடியது. மலையாள திரையுலகில் யாரு இந்த பொண்ணுனு பார்த்தாங்க. மலையாளத்தில் பெயரை தக்க வைக்க இந்த படங்கள் முக்கிய படமாக அமைந்தது.

cine News 20210620090303 Tamil News Spot

* உங்க கணவர் உங்கள் நடிப்புக்கு எவ்ளோ சப்போட்டா இருக்கார்
ஆணுக்கு பின் பெண் இருப்பது போல் பெண்ணுக்கு பின் குடும்ப சப்போர்ட் அவசியம். ஷூட்டிங் போனால் குழந்தையை கவனிக்க அம்மா இருந்தாங்க. கணவர் அமெரிக்காவில் இருந்தாலும் இங்கே வந்து நடிச்சிட்டு போவேன். அவரிடம் ஓப்பனா டிஸ்கஸ் பண்ணலாம். நான் கொஞ்சம் சீரியஸ், சைலண்டா இருப்பேன். அவரு ரொம்ப எளிமையானவர்.

* இயக்குனர் சேரனுடன் நடித்த ஆட்டோகிராப் படம் நினைவுகள்

சினேகா ரோலில் நான் நடிக்கிறதா இருந்தது. காலேஜ் போக வேண்டி இருந்ததால் முடியலை. அவர் கேட்டதால் படத்தின் இறுதியில் புது பெண்ணா நடிச்சிருப்பேன். சில காட்சிகள் வந்தாலும் திருப்தி தான்.

cine News 20210620090242 Tamil News Spot

* நடிப்பில் பிஸியாக இருந்த நேரம் திடீர்னு கல்யாணம் செய்தது
நான் நடித்த வரலாறு நல்ல பெயர் கிடைத்தது… அதில் வரும் இன்னிசை அளபெடையே பாட்டு பார்த்து தான் பழசிராஜா வாய்ப்பு வந்தது. எதிர்பாராமல் சுகாசினி மணிரத்னம் வழி வரன் வந்தது. நடிகை ஜெயஸ்ரீ தம்பி ஷியாம் தான் என் கணவர்.

* அமெரிக்க வாழ்க்கை எல்லாம் உங்களுக்கு எப்படி இருந்தது.
24 வயதில் கல்யாணம் பண்ணினேன். அமெரிக்காவில் இருந்த போது திறமைகளை வெளி கொண்டு வர வாய்ப்புகிடைச்சது. மகனுக்கு 2 வயதானபோது தான் பாட்டி, தாத்தா குடும்ப வாழ்க்கையை மிஸ் பண்றோம்னும்னு இந்தியா வந்தோம்.

* ஸ்ரேயா, சதா, ஜெனிலியாவுக்கு உங்கள் குரலில் டப்பிங் பேசியது
எதிரி படத்தில் பிராமின் பாஷை பேசியதை இயக்குனர் ஷங்கர் பார்த்து அந்நியன்ல் சதாவுக்கு டப்பிங் பேச சொன்னார். அடுத்து சச்சின்ல் ஜெனிலியாவுக்கு பேசினேன். ஷங்கர் திரும்ப சிவாஜியில் ஸ்ரேயாவுக்கு பேச கூப்பிட்ட போது அடுத்து நடிக்க கூப்பிடுங்க சார்னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.

* மலையாள நடிகர்களுடன் நடித்தது பற்றி சொல்லுங்கள்

மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், சுரேஷ் கோபி என டாப் நடிகர்களுடன் நடிச்சுட்டேன். இப்போ சுரேஷ்கோபி கூட படம் பண்றேன். மோகன்லால் கொஞ்சம் ஜாலியா இருப்பார்.

cine News 20210620090256 Tamil News Spot

* சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவா இருக்கீங்க
சோசியல் மீடியாவில் நேரடியா போஸ்ட் பண்றேன். மக்களிடம் ஒரு கனெக்ட் கிடைக்குது. பல பரிமாணங்களை வெளிப்படுத்த சின்ன வாய்ப்பு. லாக்டவுன்ல ஒரு மணி நேரம் தான் போன்ல இருப்பேன். பிறகு அந்த பக்கம் போக மாட்டேன்.

* மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க
நம்ம கூட ஆயிரம் பேர் உறவுகள், குடும்பத்தினர் இருக்கலாம். ஆனா நம்ம சொந்த கால்ல நிற்கக் கூடிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். 30 வயதை தாண்டிய பெண்கள் எல்லோருக்கும் நான் சொல்றது உடலில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

* யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் கனிகா கம்பேக்…
விஜய் சேதுபதியுடன் ஒரு படம் நடிக்கணும்னு சொன்னாங்க. இயக்குனர் கதை சொல்லும் போதே பிடிச்சது. இதுவரை நடிக்காத வித்தியாசமான கதை. டப்பிங் முடிச்சிட்டேன். இயக்குனர் என்னை வேற மாதிரி காட்டிருக்கார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன்.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *