Share on Social Media


தினமும் உறவுகொள்வது நல்லது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தினமும் சாப்பிடுவது, தூங்குவதுபோலத்தான் உறவுகொள்வதும். `தினமும் உறவு கொண்டால் உடம்பு வீக்காகிடும்னு வாட்ஸ்அப் ஃபார்வேர்ட்ல பார்த்தேனே டாக்டர்’ என்று தயங்கினீர்கள் என்றால், அந்தக் கூற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லையென்பதுதான் என்னுடைய பதில். செக்ஸ் வாழ்க்கை குறையும்போதுதான் திருமண வாழ்க்கையில் பிரச்னை வருவதற்கும், திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது.

Couple

Couple
Photo by Womanizer Toys on Unsplash

அடுத்து வயதானவர்களுக்கான தாம்பத்ய உறவுக்கு வருகிறேன். இவர்கள் தாம்பத்ய உறவைத் தவிர்ப்பதை, `வயதானவர்கள் ஏன் சைக்கிள் ஓட்டுவதில்லை’ என்பதுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம்.

வயதான பிறகு சைக்கிள் ஓட்டினால் விழுந்துவிடுவோம் என்கிற பயம். இதேதான் காமத்திலும். முயற்சி செய்து முடியாமல் போய்விடுமோ என்கிற பயம். அடுத்து, அவர்களிடம் சைக்கிளே இல்லாமல் இருக்கலாம். அதாவது லைஃப் பார்ட்னரை இழந்திருக்கலாம். மூன்றாவதாக, `இந்த வயசுல சைக்கிள் ஓட்டினா பார்க்கிறவங்க சிரிக்க மாட்டாங்களா’ என்கிற தயக்கம். அதாவது, வயதான பிறகும் தாங்கள் செக்ஸ்கொள்வது பிள்ளைகளுக்கோ, மற்றவர்களுக்கோ தெரிந்தால் கேலி செய்வார்கள் என்கிற அச்சம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *