Share on Social Media


மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் இதுகுறித்துப் பேசினோம்,

“ அரசமைப்புச் சட்டப்படி அனைவருக்கும் அளிக்கப்பட்ட உரிமையின்படி மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். எந்தவொரு அரசும் ஒரு வழக்கில் தோற்கும்போது அதோடு நிற்காது. அதேபோல எந்தவொரு தரப்பினரும் தங்களுக்கான நீதிக்காக இறுதியாக உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல, தாங்கள் எடுத்த அரசியல் நடவடிக்கைகள் கண்துடைப்பு அல்ல என்பதை நிரூபிக்கவும் கடைசிவரை போராடுகிறார்கள். ஆனால், உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு தற்போது அரசு அளித்திருக்கும் மனுவில் பதில் இல்லை. அதனால் இந்த மேல்முறையீடு எந்தவிதத்திலும் இவர்களுக்கு வெற்றியைத் தராது. காரணம், இவர்களின் நடவடிக்கைகள் நியாயத்தை நோக்கியதாக இல்லை. அரசியல் ரீதியாக தாங்கள் செய்தது சரிதான் என திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அது வெல்லாது” என்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் குறித்து, தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

“ எங்கள் தலைவர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போதே கொடுத்த வாக்குறுதி, வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு. அதுமட்டுமல்ல, 2016 தேர்தல் அறிக்கையிலேயே வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்து, வாக்குறுதி அளித்திருந்தோம். சமூக நீதியின்பால் அக்கறைகொண்ட தி.மு.கழகம் ஆரம்பம் முதலே இந்த விஷயத்தில் மிக உறுதியாக இருந்து வருகிறது . அதனால் எங்கள் செயல்பாட்டின்மீது விமர்சனம் வைப்பது, சந்தேகத்தை எழுப்புவது தேவையற்றது. எம்.பி.சியில் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட சமூகங்கள் இருந்தாலும், வன்னியர்கள் பெரும்பான்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அதுமட்டுமல்ல, எம்.பி.சி இட ஒதுக்கீடு வருவதற்கு அவர்களின் போராட்டமும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால், அதிமுக இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எடுத்த முடிவுதான் தற்போதைய இந்த நிலைக்குக் காரணம். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. அதற்கான முழுமையான தரவுகளோடு இந்த அரசு வழக்கை எதிர்கொள்ளும்” என்கிறார் அவர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *