Share on Social Media


“வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்த சட்டத்தை இயற்றிய அ.தி.மு.க அரசில் அங்கம் வகித்துவந்த கருணாஸ், தற்போது அந்தச் சட்டம் ரத்தானதை வரவேற்று அறிக்கை வெளியிடுவது அரசியல் இல்லையா?”

”கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சட்டமன்றத்தில் இந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை அவசரகோலத்தில் இயற்றும்போதே, அதை எதிர்த்து பேட்டி கொடுத்ததோடு ‘தேசிய தெய்விக யாத்திரை’யும் சென்றவன் நான்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கொடுப்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியானது. மற்றபடி நான் எந்தச் சமூகத்துக்கும் எதிரானவன் கிடையாது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கேகூட 100 % இட ஒதுக்கீட்டையும் கொடுங்கள். எனக்கு மகிழ்ச்சிதான். எந்த வருத்தமும் கிடையாது.

ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பே நடத்தாமல், வெறுமனே ஒரு சமூகத்துக்கு மட்டும் 10.5% கொடுத்துவிட்டால், மற்ற சமுதாயங்களுக்கு எதைக் கொடுப்பது… அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்… அவர்களும் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டாமா… அரசு வேலைக்குச் செல்ல வேண்டாமா?

இட ஒதுக்கீடு பற்றிய புரிதல், இன்றைய சமூகத்தில் இல்லை என்பது வருந்தத்தக்கது. பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில், வன்னியர் உட்பட 116 சாதிகள் இருக்கின்றன. இவர்களுக்கு மொத்தம் 20% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்துவருகிறது. ஆக, மொத்தமுள்ள 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு மட்டுமே 10.5%-ஐ உள் இட ஒதுக்கீடாகக் கொடுத்துவிட்டால், மீதம் உள்ளவர்ளின் நிலை என்ன? இதை கருணாஸ் மட்டும் கேட்கவில்லை… 115 சமுதாய மக்களின் கேள்வியும் இதுதான்!”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *