Share on Social Media

இந்த பங்களாதேஷ் தொடரிலுமே கூட முதல் போட்டியில் இலங்கை அணி 102-6 என்ற நிலையில் இருக்கும்போது உள்ளே வந்த ஹசரங்கா 60 பந்துகளில் 74 ரன்களை எடுத்து மோசமான தோல்வியிலிருந்து அணியை காப்பாற்றியிருப்பார். லங்கா ப்ரீமியர் லீகிலும் இறுதி ஓவர்களில் இறங்கி பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். கடந்த சீசனில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 160 க்கும் மேல்.

இந்த பர்ஃபார்மென்ஸ்கள்தான் ஹசரங்கா மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. துணைக்கண்ட சூழலில் அபாயகரமான ஸ்பின்னராக இருக்கும் ஹசரங்கா இந்திய மைதானங்களில் ஐபிஎல்-லில் ஆடினால் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பப்படுகிறது.

வனிந்து ஹசரங்கா

வனிந்து ஹசரங்கா
AP

பிப்ரவரியில் நடந்து முடிந்த மினி ஏலத்திலேயே ஹசரங்கா பங்கேற்றிருந்தார். அவருக்கு அடிப்படை விலையாக 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த அணியும் அவரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ‘இலங்கை வீரர்களின் சர்வதேச தொடர்கள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அதனாலயே இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் விட்டோம்’ என இலங்கையின் முன்னாள் வீரரான சங்ககரா இதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

இந்த சீசனில் விற்கப்படாத வீரர்களின் பட்டியலில் இருக்கும் ஹசரங்கா, அடுத்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *