Share on Social Media


கார் வெச்சிருந்தால்தான் அப்போல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்குக் கூடுதல் மதிப்பும், மார்க்கெட் நிலவரம் நல்லா இருக்குன்னும் சொல்வாங்க. ஆனா, எங்களுக்குச் சொந்த கார் இல்லாம சிரமப்பட்டிருக்கோம். எனக்கு எங்கிருந்தாவது வண்டி கிடைக்கும். அவர் காருக்காகக் காத்திருப்பார். அவரையும் அதே கார்ல ஏத்திகிட்டு, பல கலைஞர்களும் ஒண்ணா பயணிப்போம். ஒண்ணா நடிக்கும்போது, பர்சனல் விஷயங்களையெல்லாம் மனம்விட்டுப் பேசுவோம். நம்மகூட நடிக்கும் புதுமுக கலைஞர்களை நாம எந்த வகையிலயும் காயப்படுத்தக் கூடாதுனு சொல்லிப்போம்.

`உங்களுக்குனு தனி அடையாளம் கிடைக்கிற மாதிரி, நடிப்பு ஸ்டைலை மாத்திக்கோங்க’ன்னு அவர்கிட்ட சொல்லியிருக்கேன். அதைக் கடைப்பிடிச்சு, சீக்கிரமே பெயர் எடுத்தார். அதையும் என்கிட்ட பலமுறை சொல்லியிருக்கார். `படிக்காதவன்’ படத்துல தெலுங்கு பேசி வித்தியாசமா நடிச்சிருந்தார். அந்தக் காட்சிகளை ரொம்பவே ரசிச்சேன். அவரும் நானும் பல படங்கள்ல இணைஞ்சு நடிச்சிருக்கோம். அதுல, `ஷாஜகான்’ படம் பெரிசா பிரபலமாச்சு. நல்லா நடிச்சிருந்தாலோ, டயலாக் பேசியிருந்தாலோ, மனம்விட்டுப் பாராட்டுவார். எல்லாக் கலைஞர்களுடனும் சுலபமா மிங்கிள் ஆகிடுவார். ரிகர்சல் பார்க்கும்போதே, காமெடி வசனத்தைக் கேட்டு நல்லா சிரிச்சு முடிச்சுடுவோம். அப்புறம் சிரிக்காம கன்ட்ரோல் பண்ணி ஆன் த ஸ்பாட்ல நடிச்சுடுவோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *