Share on Social Media


வல்லுனர்கள் துணையுடன், நான் மேற்கொண்ட பொருளாதார ஆய்வில், நாடு முழுதும், 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதற்கு, மோடி அரசின் இயலாமையும், தவறான கொள்கையுமே காரணம்.
– காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்

‘வங்கிகள் மூலம் கடனை அள்ளிக் கொடுத்து, எல்லாரையும் கடனாளி ஆக்கினது யாருங்க…’ எனக் கேட்கத் தோன்றும் வகையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை

முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே அறிக்கை

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தமிழகம் வளமாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் நலமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, கொரோனா உடையணிந்து, கோவை மருத்துவமனைக்கு சென்று பார்த்தது போன்ற கடினமான, ஆபத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டாம்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலர் மயில் அறிக்கை

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மாநில அளவில் ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் பல்துறை சான்றோர், கல்வியாளர், தொழில்துறை வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளதால், தமிழகத்தின் வளர்ச்சி சிறப்பான இலக்கு நோக்கி செல்வது உறுதி.

தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேட்டி

கறுப்பு பூஞ்சை நோய்க்கு, போதுமான மருந்து இல்லாததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம், போதிய மருந்துகளை மத்திய அரசு அனுப்பி வைக்காதது தான். எனவே வெளிநாடுகளில் இருந்து இந்த மருந்தை உடனே இறக்குமதி செய்து, போதிய அளவு அனுப்பி வைக்க வேண்டும்.

தொ.மு.ச., தொழிற்சங்கத்தின் பொதுச் செயலர் சண்முகம் அறிக்கை

முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நிதித்துறை அமைச்சராக இருந்த போது, தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறையினருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்தார். ஆட்சியின் போது அவர்களுக்கு ஏதும் செய்யாத அவர், இப்போது அரசியலுக்காக பரிவு காட்டுகிறார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *