Share on Social Media


தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் பணியாற்றிவரும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அந்த மூன்று அதிகாரிகளையும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை மம்தா அரசு எடுத்துள்ளது. `ஜனநாயக விரோத சக்திகளிடம் தனது அரசு ஒருபோதும் அடிபணியாது’ என்று மம்தா பானர்ஜி கூறினார். இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது.

இது குறித்து தி.மு.க தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், `மேற்கு வங்கத்தில் பணியாற்றும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு ஒருதலைபட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மத்திய அரசு தம் விருப்பப்படி குடிமைப்பணிகளில் உத்தரவிடக் கூடாது’ என்று கூறியிருக்கிறார்

இந்தச் சூழலில், மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அமித் ஷா, மாநிலத்தில் பணியிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு வருமாறு உத்தரவிட மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறினார். மேலும் அவர், `மேற்கு வங்க மக்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள். அந்த ஏக்கம் அரசியல் தலைமையை மாற்றுவதற்கானது மட்டுமல்ல… ஊழல், வன்முறை அரசியல், பணப் பறிப்பு ஆகியவற்றை ஒழிப்பதற்கான ஏக்கம். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால், இந்த மாநிலத்தின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும். பா.ஜ.க வெற்றிபெற்றால் மேற்கு வங்கத்தில் மண்ணின் மைந்தர் முதல்வராவார்’ என்று கூறினார்.

மம்தா தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்ளும் வகையில், பிரசாந்த் கிஷோரின் `ஐபேக்’ ஆலோசனைகள்படி பல்வேறு திட்டங்களை அமல்படுத்திவருகிறார். வளர்ச்சி குன்றிய கிராமப் பஞ்சாயத்துகளை அடையாளம்கண்டு, அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்துகொடுப்பது, கட்சியின் கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களைச் செய்வது, மாவட்டத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இளைஞர்களையும் புதுமுகங்களையும் அமர்த்துவது என்று பல அதிரடிகளைச் செய்துவருகிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *