Share on Social Media


அதே சமயம் ‘கைதி’ சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!” என்று சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

இந்த விவகாரம் குறித்து மேலும் தகவல்கள் பெற டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவுடன் பேசினோம். “யாரோ ஒருவர் என்னைப் பார்த்ததாகவும் இப்படியெல்லாம் நிகழ்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த வழக்குக் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை என்னை வந்து சேரவில்லை. அது தெரிந்தால்தான் என்னாலும் இது குறித்துப் பேச முடியும். இப்போது நான் இது குறித்து ஏதேனும் விளக்கம் அளித்தால் அதைவைத்து வேறொரு பிளான் செய்வார்கள். அதனால் இது குறித்து கோர்ட்டில் எங்களை நிரூபித்துக் கொள்கிறோம்.

கேரளாவில் கோர்ட்டில் இப்படிச் சொன்னதாகச் செய்திகள்தான் வந்திருக்கின்றன. ஆனால், சட்டப்பூர்வமாக எங்களிடம் எதுவும் தகவலாக வந்து சேரவில்லை. அதனால், இது குறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது. நாங்கள் லோகேஷிடம் கதையைக் கேட்டோம். குறுகிய காலத்தில் முடிவு செய்து படத்தை எடுத்தோம். அவ்வளவுதான். கோர்ட்டிலிருந்து தகவல் வரட்டும். இது குறித்து தற்போதைய நிலையில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை!” என்பதாக முடித்துக் கொண்டார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *