Share on Social Media


“கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் பரவியது. இது சீன வைரஸ் என்று நான் ஆரம்பத்தில் குற்றம்சாட்டியத்தை இப்போது ஜோ பைடன் அரசே வழிமொழிந்து வருகிறது. அதற்கான ஆதாரங்களும் இப்போது கிடைத்துள்ளது. உண்மை வெளிப்பட்டுவிட்டது. உடனடியாக சீனா இதற்கு மன்னிப்பு கோரி அமெரிக்காவிற்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்.” என்று டிரம்ப் காரசாரமான அறிக்கையை வெளியிட்டு மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது முதலில் எப்படி பரவியது என்பது குறித்த தெளிவான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்த குழப்பம் அதிகரிக்க அமெரிக்க அரசியல் களத்திலும், ஊடகங்களிலும் வெளியான கருத்துக்கள் மற்றும் செய்திகளால் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் பரவியதா? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் கீழ் ஆராயந்து 90 நாட்களுக்குள் முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க உளவுத்துறையினருக்கு திடீர் உத்தரவை பிறப்பித்தார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அமெரிக்க உளவுத்துறை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மேலும், “எங்களுக்கு அமெரிக்காவின் மீது தான் சந்தேகம் அதிகமாக உள்ளது. அதனால், உலக சுகாதார அமைப்பினர் அமெரிக்காவுக்கு சொந்தமான அனைத்து ஆய்வகங்களிலும் சோதனை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *