Share on Social Media


2030-ம் ஆண்டுக்குள் இந்தியா தன்னுடைய மொத்த ஆற்றல் உற்பத்தியில், 40% ஆற்றலை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. அதோடு, மொத்த வாகனங்களில் 30 – 40% வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குவனவாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது. இது நம்மிடையே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இந்த இலக்கை அடைவதற்கு, இந்தியா தயாராக இருக்கிறதா?

Electric Car

Electric Car
Image by andreas160578 from Pixabay

ஒரு பேட்டரியில் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, விநியோகிக்க ஏதுவாக மூன்று முக்கியமான பாகங்கள் இருக்கும். எந்தத் தொழில்நுட்பத்துக்காக பேட்டரி பயன்படுத்தப்படும் என்பதைப் பொறுத்து, பல்வேறு வகையான கனிமங்கள் அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம், கோபால்ட், நிக்கல், செம்பு, கிராஃபைட் ஆகியவையே, நாம் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் லித்தியம் ஐயான் பேட்டரிகளைத் தயாரிக்கத் தேவைப்படுகின்றன. கைபேசிகளில் தொடங்கி, மின்சார கார்களிலிருந்து பெரிய மின் கட்டமைப்புகள் வரையுமே அது பயன்படுகிறது.

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிதி ஆயோக் அறிக்கையில் ஆற்றல் சேமிப்புத் திட்டத்தின் (Energy Storage Mission) தலைவரான அமான் ஹான்ஸ், “போதுமான அளவுக்கு மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு பேட்டரிகளை விநியோகிக்க முடிந்தால், இந்தியா எண்ணெய்-சார் நாடாக இருப்பதிலிருந்து முழுவதும் பேட்டரி-சார் நாடாக மாறிவிடும்” என்று குறிப்பிட்டிருந்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *