Share on Social Media


உலகளவில் பல்வேறு விதமான கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனை அரசாங்கமும், தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தின் தென் மேற்கு திசையில் அமைந்துள்ள கார்ன்வால் பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுவனான ஹியூ பில்லிங், சாலை – கடற்கரை ஓரங்களில் யாரோ வீசி சென்ற குப்பைகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

image

63 வயதான அவரது தாத்தா ஜான் புல்லிங்ஹாமை பார்த்து அவருக்கு இந்த ஆர்வம் வந்துள்ளது. தாத்தா ஜானுக்கு சுற்றுச்சூழல் மீது அதீத அக்கறை உள்ளதாம். அதனால் எப்போதும் குப்பைகளை சேகரிப்பதில் அவர் பிஸியாக இருந்து வருகிறார். அதனை பார்த்து வளர்ந்த பேரப்பிள்ளை ஹியூ பில்லிங்கிற்கு அந்த ஆர்வம் வர தாத்தாவுடன் சேர்ந்து குப்பைகள் அகற்றும் பணியை தொடங்கியுள்ளார். 

இந்த பணியை ஆங்கிலத்தில் ‘Litter Picking’ என சொல்வார்கள். ஆனால் அதை கூட Glitter Picking என மழலை பேச்சு மாறாமல் சொல்லும் பில்லிங் இந்த பணியை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

“நாங்கள் இருவரும் எங்கு சென்றாலும் போகும் வழியில் உள்ள குப்பைகளை சேகரித்துக் கொண்டே சென்று வருவோம். அவனுக்கு சூழலியல் குறித்த புரிதலை கற்றுத்தர விரும்புகிறேன். அவனுக்கும் அதில் ஆர்வம் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது” என தாத்தா ஜான் தெரிவித்துள்ளார். 

தகவல் : MIRROR 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *