Share on Social Media



புதுடெல்லி:  ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, மும்பை பாந்த்ரா மற்றும் புதுடெல்லி ரயில்வே நிலைய திட்டத்துக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக  டிஎல்எப் குழுமம் அவருக்கு தெற்கு டெல்லியில் இடத்தை லஞ்சமாக வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இது தொடர்பாக முதல் கட்ட விசாரணையை  தொடங்கியது. 2 விசாரணை நடத்திய சிபிஐ வழக்கில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இல்லை என கூறி உள்ளது. ஏற்கனவே மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த லாலு கடந்த ஏப்ரலில் ஜாமீனில்  வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *