Share on Social Media


கொரோனா, சமூகப் பரவல் என்ற அபாய நிலையில் உள்ளதால் தினந்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கு மட்டுமே தீர்வைத் தரும் என்கிற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். லாக்டௌன் காரணமாக சிறு, குறு தொழில்கள் முடங்கிவிட்டன. ஏன்… நடைபாதைக் கடைகளைக்கூட அடைக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களான பல்வேறு தொழிற்சாலைகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இரவு, பகலாகச் செயல்பட்டு வருகின்றன என்பதுதான் வேடிக்கை.

சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர், படப்பை, மறைமலைநகர் போன்ற பகுதிகளில் ஹூண்டாய், நிசான், ஃபோர்டு, ஜே.கே டயர்ஸ், அப்போலோ டயர்ஸ் உள்ளிட்ட வாகன உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டுக் கொண்டுள்ளன. இவற்றிலெல்லாம் குறைந்தபட்சம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

ஆட்டோமொபைல் நிறுவனம்

உதாரணத்துக்கு, ஹூண்டாய் நிறுவனத்தில் ஒவ்வொரு ஷிஃப்ட்டுக்கும் 10,000 பேர் என்கிற அடிப்படையில் 3 ஷிஃப்ட்களில் 30,000 பேர் வரை தினமும் பணிபுரிறார்கள். லாக்டௌன் காலங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடாது. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் இந்தத் தொழிற்சாலைக்கு செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் மூலம் தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இப்படி வந்துசெல்பவர்கள் தினமும் வீடுகளுக்குத் திரும்பும்போது குடும்பத்தினருடனும், அக்கம்பக்கத்தினருடனும் தினசரி தொடர்பில்தான் இருக்கிறார்கள். இதே நிலைதான் மற்ற தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும்.

இந்த விஷயங்களை வைத்துப் பேசும் செங்கல்பட்டு நகரைச் சேர்ந்த நடைபாதைக் கடை வியாபாரிகள் பலரும், “நாங்க நடைபாதையில காய்கறிக் கடை போட்டாலோ, இட்லிக் கடை போட்டாலோ கொரோனா பரவும்னு தடுக்குறாங்க. இத்தனைக்கும் நாங்க கடைபோடும் இடம் வெட்டவெளி. அங்கேயே கொரோனா பரவும்னா, தொழிற்சாலைகளுக்குள்ள ஏசி போட்டுக்கிட்டு வேலைபார்க்கும்போது கொரோனா பரவாதா? அந்தத் தொழிலாளர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, வீட்ல இருக்குறவங்களுக்கும் கொரோனா பரவாதா?

எங்கள கடைபோட விடலையேங்கற கோபத்துல நாங்க சொல்லல. கொரோனா ஊடரங்குனா… ஒரேயடியா அதை ஒழிக்கற வரைக்கும் எல்லா இடத்துலயும் கட்டுப்பாடு இருக்கணும்கிறதுதானே முக்கியம். அந்தத் தொழிற்சாலைகள்ல பரிசோதனை பண்றதால மட்டும் அதைத் தடுத்துட முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

vikatan 2020 08 a4c7cf73 f299 417f 9cc8 c2bb976f2186 Chennai lock new 1 Tamil News Spot
ஊரடங்கு

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என அவர்கள் சொல்லிக்கொண்டாலும், டெம்ப்ரேச்சர் மற்றும் ஆக்சிஜன் அளவு மட்டுமே பார்க்கப்படுகிறது. அதன் துல்லியம் என்ன என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. வாசலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவருக்கு, உள்ளே சென்றதும்கூட கொரோனா தொற்று ஏற்படக்கூடும். மேலும், கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிய 4 நாள்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படும் நிலையில், யாருக்குத் தொற்று, யாருக்குத் தொற்று இல்லை என்பதை எப்படி அறிவார்கள்? மேலும், சாதாரண நோய்நிலையில் (mild) அறிகுறிகளற்ற ஒரு கொரோனா தொற்றாளர் ஒருவர், அதை மற்றவர்களுக்குப் பரப்பும் ஸ்பிரெட்டர் (spreader) ஆக இருந்தால் என்ன செய்வது? மேலும், தீவிர நிலையில் ஒருவேளை கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் புகுந்திருந்தால், தொழிற்சாலை வாயில்களில் நடத்தப்படும் பரிசோதனைகளால் அதைக் கண்டறிய முடியாது.

இந்தச் சூழலில்தான், “உள்ளூர் தொழிலாளர்கள் உயிரிழந்தாலும் பரவாயில்லை… வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படக் கூடாது என்ற ரீதியில் அரசின் கரிசனம் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியை ஒரு மாதம்கூட நிறுத்தி வைக்க முடியாதா? பாரபட்சம் இல்லாத ஊரடங்கு இருந்தால் மட்டும்தான் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்” என்று குமுறுகிறார்கள் தொழிற்சாலைகள் இயங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள்.

Tamil Nadu PMK invites parties sans BJP for 2016 polls alliance Tamil News Spot
மருத்துவர் ராமதாஸ்

இந்த விஷயம் தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “அத்தியாவசிய தொழிற்சாலைகள் என்கிற பெயரில், அத்தியாவசியமற்ற பல பெரிய தொழிற்சாலைகளும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. மின் உற்பத்தி நிலையங்கள், உணவுப்பொருள் தயாரிப்பு ஆலைகள் போன்றவையே அத்தியாவசியப் பொருள் தயாரிப்பு ஆலைகள். அப்படியிருக்க, அத்தியாவசியமற்ற மகிழுந்து ஆலைகள், கண்ணாடி ஆலைகள், உதிரிபாக ஆலைகள் போன்றவை தற்போது இயங்க வேண்டிய தேவை என்ன? இப்படி ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணியாற்றும் ஆலைகள் தொடர்ந்து இயங்குவதால், கொரோனா வேகமாகப் பரவுகிறது. அவையெல்லாம் உடனடியாக மூடப்பட வேண்டும். நிறுவனங்களின் லாபத்தைவிட தொழிலாளர்களின் உயிர்கள் முக்கியம்” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

மறைமலை நகர் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில், கொரோனா நோய்த்தொற்று அபாயத்துக்கு இடையே நிறுவனம் தங்களைப் பணிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக ஊழியர்கள் குற்றம்சுமத்தி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் முடிவு என்ன?Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *