Share on Social Media


கொச்சி : நாட்டை அவமானப்படுத்தும் விதமாக வரைந்த கார்ட்டூனை கவுரவித்த கேரள லலித் கலா அகாடமிக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநில பா.ஜ., தலைவர் கே.சுரேந்திரன் கூறியதாவது:பல்வேறு நாடுகள் பங்கேற்ற கொரோனா தொற்று தடுப்பு பற்றிய மருத்துவ மாநாடு குறித்து வெளியான கார்ட்டூனில், காவி நிற சால்வை போர்த்திய பசு மாடு பங்கேற்றது போல வரையப்பட்டு இருந்தது.

தேசத்தையே அவமானப்படுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டு இருந்த இந்தக் கார்ட்டூனுக்கு, கேரள லலித் கலா அகாடமி சிறந்த கார்ட்டூனுக்கான பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

latest tamil news

இதுகுறித்து பேசிய கேரள லலித் கலா அகாடமி தலைவர் நேமம் புஷ்பராஜ், “தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்கள் இணைந்து சிறந்த கார்ட்டூனை தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட படத்துக்குத்தான் பரிசு வழங்கியுள்ளோம். இதில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை,” என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *