Share on Social Media


கேரளாவின் கொச்சியில் லட்சதீவு ஆட்சியர் ஆஸ்கர் அலி பேட்டி அளித்தார். லட்சதீவை எதிர்காலத்தில் மொரீஷியஸ், மாலத்தீவுபோல நவீனமயமாக்க மத்திய அரசு இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதனை இந்த தீவுகளில் வாழும் குடிமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதனை எதிர்த்து வருகின்றனர் என்றுள்ளார்.

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக இருப்பவர் பிரபுல் படேல். லட்சத்தீவின் நிர்வாக பொறுப்பும் இவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் மாட்டிறைச்சிக்கு தடை, மது விடுதிகளுக்கு அனுமதி, வளர்ச்சிக்கு நிலத்தை எடுத்துக்கொள்ளும் வரைவு சட்டம், குண்டர் சட்டம் அமல் போன்ற நடவடிக்கைகளை லட்சத்தீவில் எடுத்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இது குறித்து காங்., எம்.பி., ராகுல், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ‘லட்சத்தீவின் நிர்வாகி பிரபுல் படேல் அறிவித்துள்ள மக்கள் விரோத கொள்கைகளால் அத்தீவு மக்களின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளிடமோ அல்லது பொதுமக்களிடமோ முறையாக ஆலோசிக்காமல் பெரும் மாற்றங்களை முன்வைத்துள்ளார். இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக லட்சத்தீவு மக்கள் போராடுகின்றனர்.

latest tamil news

இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றவர்களை தேர்தலில் தகுதி நீக்கம் செய்யும் பஞ்சாயத்து ஒழுங்குமுறை வரைவில் உள்ள விதி அப்பட்டமான ஜனநாயக விரோதம். மேலும் குண்டர் சட்டம், லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை, மது விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்றவை உள்ளூர் சமூகத்தின் கலாச்சார, மத இழை மீதான திட்டமிட்ட தாக்குதல். தயவுசெய்து இந்த விஷயத்தில் தலையிட்டு மேற்கூறிய உத்தரவுகள் திரும்பப் பெறப்படுவதை செய்யும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்’. இவ்வாறு ராகுல் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் தற்போது லட்சதீவு ஆட்சியர் ஆஸ்கர் அலி கேரளாவின் கொச்சியில் இதுகுறித்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார். திட்டமிட்ட தவறான தகவல்களைப் பரப்பும் பிரசாரத்தை இன்று பலர் தூண்டி வருகின்றனர். லட்சதீவை எதிர்காலத்தில் மொரீஷியஸ், மாலத்தீவுபோல நவீனமயமாக்க மத்திய அரசு இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதனை இந்த தீவுகளில் வாழும் குடிமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதனை எதிர்த்து வருகின்றனர் என்றுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *