Share on Social Media


கொச்சி:’லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேலை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்’ என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவு, வரலாற்று ரீதியாக கேரளாவுடன் அதிக தொடர்புடையது. அங்கு பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி, மலையாளமாக உள்ளது. லட்சத்தீவின் மத்திய அரசு நிர்வாகியாக பிரபுல் படேல், கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டார். பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், நிர்வாகியாகநியமிக்கப்பட்டதிலிருந்தே, அவருக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கிஉள்ளன.

‘லட்சத்தீவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு பிரபுல் படேல் விதித்துள்ள தடை, முஸ்லிம்களையும், மலையாளிகளையும் பாதிக்கிறது’ என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இதையடுத்து, ‘பிரபுல் படேலை திரும்ப அழைக்க வேண்டும்’ என, கேரளாவைச் சேர்ந்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

லட்சத்தீவிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், ”லட்சத்தீவுக்கும், கேரளாவுக்கும் உள்ள நெருக்கமான உறவை சீரழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன,” என, கூறியுள்ளார்.

கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேலின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்’ என, கூறியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *