Share on Social Media


இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக்கில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் குளிரின் காரணமாக அங்கு சீனாவின் சார்பில் குவிக்கப்பட்டிருந்த சீன இராணுவ வீரர்களுள் 90 சதவீதத்தினர் சுழற்சி முறையில் மாற்றப்பட்டு அவர்களது பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். லடாக் எல்லையில் தற்போது நிலவி வரும் கடும் குளிரை சீன இராணுவப் படை வீரர்களால் பொருட்படுத்த இயவில்லை. இதன் மூலம் அவர்களில் பெரும்பாலானோர் உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாவதாகத் தெரிவிக்கின்றனர். அதனால், இந்நிலையை சரிசெய்யும் விதமாக சீன இராணுவத்தினர் அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனப் படையினர் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் லடாக் எல்லையில் பணியமர்த்தப்படும் வீரர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் அங்கு பணிபுரிவர். கடும் குளிர் நிலவும் காலங்களில் 40 முதல் 50 சதவீதத்தினர் மட்டுமே சுழற்சி முறையில் மாற்றப்படுவர்.

கடந்த ஆண்டு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் சீன இராணுவப் படையினர் ஊடுருவ முயற்சித்தபோது அது இந்திய இராணுவப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் 15ம் தேதி கள்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா இரு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடத்தப்பட்ட தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். மறுபுறம், சீனாவைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு முதலில் தெரிவித்தாலும் பின்னர் இந்தியாவின் உளவுத்துறையினர் சமர்ப்பித்த அறிக்கையில், தாக்குதலின் போது 50 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ரஷ்ய ஊடகங்களும் இதை உறுதிப்படுத்தின.

india vs china Tamil News Spot
இந்தியா – சீனா

எல்லையில் தொடர்ந்து நீடித்து வந்த பதற்றமான சூழலை தணிக்க இந்திய இராணுவத் தளபதி மேஜர் முகுந்த் நரவனே நேரடியாகக் களத்தில் இறங்கி சீன இராணுவத்தின் உயரதிகாரிகளை சந்தித்து இறுதியில் சுமூகமான முடிவை எட்டியதன் விளைவாக கடந்த பிப்ரவரி மாதத்தில் எல்லை இராணுவப் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியது. கள்வான் பள்ளத்தாக்கு தாக்குதலானது நடத்தப்பட்டு ஓராண்டு ஆகவுள்ள நிலையில், மீண்டும் எல்லையில் சீன இராணுவத்தினர் உயர்ரக ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் இறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் எஸ்- 400 ரக ஏவுகணைகளும், ரஃபேல் போர் விமானங்களையும் எல்லையில் நிலைநிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *