Share on Social Media


பத்திரிகையாளரின் மைக்கை பறித்த அமைச்சர்!

இந்த நெருக்கடியின் விளைவாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, தன் மகன் குறித்துக் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரிடம் கடுமையாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று லக்கிம்பூர் கேரி மாவட்டத்துச் சென்ற அஜய் மிஸ்ராவிடம் பத்திரிகையாளர் ஒருவர், “லக்கிம்பூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்று சிறப்பு விசாரணைக் குழு சொல்லியிருக்கிறதே?” என்று கேட்டார். ஆத்திரமடைந்த அஜய் மிஸ்ரா, “இது என்ன முட்டாள்தனமான கேள்வி… உனக்கென்ன பைத்தியமா?” என்று கேட்டு பத்திரிகையாளரின் மைக்கையும் பறித்துவிட்டார்.

ஏற்கெனவே, ஹரியானா, உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்கள் காரணமாக விவசாயிகள் பலரும் பா.ஜ.க மீது கடுங் கோபத்திலிருந்தனர். பஞ்சாப், உ.பி-யில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதையொட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்து விவசாயிகள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க நினைத்தது பா.ஜ.க. ஆனால், தற்போது சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை பா.ஜ.க-வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அஜய் மிஸ்ரா நீக்கப்படுவாரா?

“அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை மனதில் வைத்துத்தான், புதிய அமைச்சரவையில் உ.பி-யைச் சேர்ந்த ஏழு பேருக்கு இடமளித்தது கட்சித் தலைமை. அதில் ஒருவர்தான் அஜய் மிஸ்ரா. உ.பி-யின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது லக்கிம்பூர் கேரி மாவட்டம். உ.பி-யின் மிகப் பெரிய மாவட்டமும் இதுதான். விவசாயிகள் அதிகம் வாழும் மேற்கு உ.பி-யில் வேளாண் சட்டங்களால், ஏற்கெனவே பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தற்போது விசாரணைக் குழு அறிக்கை வெளியான பின்னர், மேலும் அந்தப் பகுதியில் பா.ஜ.க-வுக்கு நெருக்கடிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், மேற்கு உ.பி-யில் செல்வாக்கு பெற்ற அஜய் மிஸ்ராவை அமைச்சரவையிலிருந்து நீக்கினால், அது மேலும் பின்னடைவை ஏற்படுத்துமோ என்கிற எண்ணம் கட்சி மேலிடத்துக்கு இருப்பதாகத் தெரிகிறது. இருந்தும், தற்போதிருக்கும் நெருக்கடிக்கு, அஜய் மிஸ்ரா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *