Share on Social Media


ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராதம் செலுத்த இடைக்கால தடை விதித்தும், தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து, ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் மாடல் காரை வாங்கினார் நடிகர் விஜய். அந்த காரை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்காக 137 சதவிகித வரி விதிக்கப்பட்டது. காரின் விலையை விட, இந்தியாவில் இறக்குமதி வரி மிக அதிகமாக இருந்தது, மேலும் வெளிநாட்டு சொகுசுக் கார்கள் இறக்குமதிக்கு மாநிலங்கள் விதிக்கும் நுழைவு வரியும் கட்ட வேண்டும். எனவே, காருக்கான நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

2012-ம் ஆண்டு அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா, 20 சதவிகிதம் நுழைவு வரி மட்டும் கட்டிவிட்டு உங்களது வாகனத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் என இடைக்கால உத்தரவிட்டார். அதனடிப்படையில் விஜய்-யும் 20 சதவிகித நுழைவு வரியை செலுத்திவிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்து பயன்படுத்தி வந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கட்டாயம் நுழைவு வரி வழங்கவேண்டும் என மாநிலங்குகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில், விஜய்-யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரிவிலக்கு தொடர்பான வழக்கும் மறு விசாரணைக்காக 2021 ஜூலை 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியன், “சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக சினிமாவில் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி விலக்கு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல… கட்டாயப் பங்களிப்பு” என விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு லட்சம் ரூபாய் அபராதத் தொகையையும் அவருக்கு விதித்து உத்தரவிட்டார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *