Share on Social Media


பெங்களூரு : கொரோனா பரவும் நெருக்கடியான நேரத்தில், மக்களுடன் இருந்து உதவும் ஹொன்னாளி பா.ஜ., – எம்.எல்.ஏ.,வும், முதல்வரின் அரசியல் செயலருமான ரேணுகாச்சார்யா பணியால், கட்சி மேலிட தலைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தாவணகரே ஹொன்னாளி பா.ஜ., – எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அடிப்படை வசதிகளை தெரிந்து கொள்கிறார்.கொரோனா நோயாளிகளுடன் நடனமாடி, அவர்களை உற்சாகப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.குறிப்பாக பல முறை தன் காரிலேயே ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து, நோயாளிகளின் உயிரை காப்பாற்றினார்.

தேவையானோருக்கு உணவு, மருந்துகள் வழங்குகிறார்.கொரோனா பரவும் நேரத்தில், ரேணுகாச்சார்யா பணிகளை கவனித்த, பா.ஜ., மேலிடம் மகிழ்ச்சியடைந்துள்ளது.கட்சியின் தேசிய செயலரும், கர்நாடக பொறுப்பாளருமான அருண்சிங் தொலைபேசியில் ரேணுகாச்சார்யாவை தொடர்பு கொண்டு, ‘மக்களுக்கு சிறப்பாக பணியாற்றுகிறீர்கள். ‘கொரோனா முடிவுக்கு வந்த பின், டில்லிக்கு வாருங்கள். நாம் சந்திக்கலாம்’ என, அழைப்பு விடுத்துள்ளார்.மாநில தலைவர் நளின்குமார் கட்டீலும் கூட, ரேணுகாச்சார்யாவை பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *