Share on Social Media


பீஜிங்: பாகிஸ்தான் கடற்படைக்கு அதிநவீன போர்த்திறன்கள் கொண்ட 4 டைப் 054ஏ/பி போர்க்கப்பலை உருவாக்கித் தர சீன அரசின் கப்பல் கட்டும் நிறுவனமான சிஎஸ்எஸ்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் கப்பல் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த விழாவில் பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்கு பிஎன்ஸ் தக்ரில் என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த கப்பலில் தரையிலிருந்து தரையிலும், தரையிலிருந்து வானிலும், கடலுக்கு அடியில் உள்ள இலக்கையும் தகர்க்கும் ஏவுகணைகள், அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த கப்பல் எதிரிநாட்டு ரோடாரில் இருந்து தப்பிக்கக் கூடிய நவீன தொழில்நுட்ப திறன் கொண்டது.

அதிகமான ஏவுகணைகளை கையாளும் திறன் கொண்ட இதுபோன்ற அதிநவீன போர்க்கப்பலை சீனா இதுவரையிலும் ஏற்றுமதி செய்ததில்லை. இதுவே முதல் முறையாகும்.  இந்த போர்க்கப்பல் சீனாவின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதிகள் கொண்டது என சிஎஸ்எஸ்சி நிறுவனமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.தென் சீன கடலைப் போல இந்தியப் பெருங்கடலையும் வளைத்துப் போட சீனா பலவழிகளிலும் முயற்சிக்கிறது. இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா பலமிக்க பாதுகாப்பு வளையத்தை கொண்டிருந்தாலும், இலங்கை, பாகிஸ்தான் மூலமாக சீனா தனது காரியத்தை மெல்ல மெல்ல சாதித்து வருகிறது. இதற்காக, பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலம் சேர்க்க போர்க்கப்பல்கள், ஜேஎப்-17 போன்ற அதிநவீன போர் விமானங்களை சீனா வழங்கி வருகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *